துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டியின் வைரல் வீடியோ! குட்டிக் கன்றின் சுட்டித்தனம்

Naughty Calf Viral Video: மாட்டுக்கார வேலா... உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா என்று பாடச் செய்யும் வெளிநாட்டு வைரல் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 18, 2022, 07:10 PM IST
  • குட்டிக் கன்றின் சுட்டித்தனம் வைரல்
  • துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டியின் வைரல் வீடியோ!
  • என்னையா கட்டிப் போட்டீங்க! கன்றின் கோப வீடியோ
துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டியின் வைரல் வீடியோ! குட்டிக் கன்றின் சுட்டித்தனம் title=

வைரல் வீடியோ:  சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்கள் அனைவராலும் பார்த்து விரும்பி ரசிக்கப்படுகின்றன. வீடியோக்களை பார்த்து பரவசப்படுவதற்க்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இயல்பான வாழ்க்கையில் நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இருந்தாலும், அன்றாடம் நடைபெறும் வழக்கமான செயல்களில் குறும்புத்தனமும் அப்பாவித்தனமும் இருக்கும் வீடியோக்களும் வைரலாகின்றன. 

வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளில் மிகவும் முக்கியமானவை மாடுகள். வீட்டிலேயே கொட்டகையில் வைத்து பராமரிக்கப்படும் மாடுகளும், பசுக்களும் சொத்தாகவே கருதப்படுபவை. பாசத்துக்கு பெயர் போனவை என்றாலும், தாக்குதலுக்கும் தயங்காதவை. கோபம் வந்தால் மட்டுமல்ல, குறும்பு வந்தாலும் அவை செய்யும் செயல்கள் பதற வைப்பவை அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

கன்றுக்குட்டியின் குறும்பு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது. மரத்தில் கட்டி வைத்திருக்கும் கன்றுக்குட்டிக்கு உணவு வைத்துக் கொண்டிருக்கும் மனிதர் ஆசுவாசமாக நின்றுக் கொண்டிருக்கிறார். திடீரென துள்ளிய கன்றுக்குட்டி, அவரை தனது கயிற்றால் கட்டி சிறை வைத்தது.

திடீரென நடைபெற்ற இந்த கன்றுக்குட்டியின் துள்ளல் குறும்பால், மாட்டுக்காரர் கட்டுப்படுவது எதேச்சையாக படம் பிடிக்கப்பட்டது. இந்த வீடியோ அனைவரையும் சிரிக்க வைக்கிறது. ஏனென்றால், கன்றுக்குட்டியின் குறும்பை பார்க்கும் யாருக்கும் அதன் சுட்டித்தனம் சிரிப்பை வரவழைக்காமல் இருக்காது. உங்களுக்கு சிரிப்பு வருகிறதா என்பதை இந்த வீடியோவைப் பார்த்தால் தெரியும்... வீடியோ இதோ...

கன்றுக்குட்டியின் தாக்குதலை அசால்டாக கையாளும் அந்த நபர், கயிற்றை பிடித்து நிற்கிறார். நொடி தாமதமானாலும் அவர் கீழே விழுந்திருப்பார். கன்றுக்குட்டி அவரை மிதித்துக் கொண்டே மரத்தைச் சுற்றி ஓடியிருக்கும். குறும்புத்தனமான இந்த வீடியோ இப்போது ரசிக்கத்தக்கதாக இருந்தாலும், நொடி தவறினாலும் பிரச்ச்சனை தானே?

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

விலங்குகளின் குறும்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக் காட்டும் இந்த வீடியோவில், திடீரென எதிர்பாராத நேரத்தில் உற்சாகத்தில் ஓடும் கன்றுக்குட்டி ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சக்கைப்போடு போடுகின்றன.  

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை?

மேலும் படிக்க | சைக்கிள் ஓட்ட வீதிக்கு வந்த சிறுவனை தாக்கி கதற வைத்த தெருநாய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News