ஆணியை பிடுங்காமல் அடித்தால் மட்டும் போதும்..! வெளிநாடுகளில் வைரலாகும் விநோத விளையாட்டு - வீடியோ

வெளிநாட்டில் ஆணி அடிக்கும் விளையாட்டு வைரலாகி வருகிறது. இந்த விளையாட்டு மன அழுத்ததை போக்கும் வகையில் இருப்பதால் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 16, 2023, 02:21 PM IST
ஆணியை பிடுங்காமல் அடித்தால் மட்டும் போதும்..! வெளிநாடுகளில் வைரலாகும் விநோத விளையாட்டு - வீடியோ title=

இந்த இணைய யுகத்தில் சமூக ஊடகங்கள் மூலம் நாம் இதுவரை கேள்விப்பட்டிராத பல வினோதமான விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இணையத்தில் பகிரப்பட்டு வரும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கவும், சில சிந்திக்க வைக்கவும், பல நமக்கு சிலவற்றை கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. அந்த வகையில் தற்போது நாம் இங்கே பார்க்கப்போகும் இந்த வீடியோவானது நம்மை சிரிக்க வைக்கிறது.

வீடியோவில் எந்த நகைச்சுவையும் இல்லை அல்லது யாரும் தங்கள் கோமாளித்தனங்களால் யாரையும் சிரிக்கவைக்கவில்லை, ஆனால் இது ஒரு விளையாட்டு வீடியோ ஆகும். ஜெர்மனியின் பிரபலமான நாகல்பால்கன் கேமின் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஆண்கள் மரத்தின் தடிமனான தண்டு மீது  ஆணியை அடிக்கும் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஆணி விளையாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. விளையாட்டின் விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் மரத்தடியில் யார் முழுமையாக ஆணிகளை அடிக்கிறார்களோ அந்த குழுவே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | இறந்த தாய்..எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த வைரல் வீடியோ 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், எட்டு ஆண்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மரக் கட்டையில் ஆணிகளை அடிக்க போட்டியிடுகின்றனர். இரு குழுக்களிலிருந்தும் தலா ஒரு வீரர் ஓடி வந்து இந்த ஆணியை ஒரு சுத்தியலால் அடிக்கிறார், அதன் பிறகு ஆணி சிறிது உள்ளே செல்கிறது. அதையடுத்து மற்றவர் அணியை அடிக்க மரக் கட்டையை நோக்கி ஓடிவருகிறார். இவ்வாறு தொடர்ந்து போட்டியாளர்கள் மாற்றி மாற்றி அணியை அடிப்பதில் யாருடைய ஆணி முழுவதுமாக உள்ளே செல்கிறதோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. 

இப்போட்டியில் வெற்றிபெறுவதற்காக நடக்கும் ஓட்டம் அனைவரையும் சிரிக்கவைக்கிறது. ஜெர்மனியில் 'நாகல்பால்கன்' என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர். இந்த வீடியோ முதலில் டிக்டாக்கில் Woody மற்றும் Kleinyl என்ற பயனரால் பகிரப்பட்டது. பின்னர் இது மற்ற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டது . இந்த வீடியோ ட்விட்டரில் இதுவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 1 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | பளார்... பாம்பை அடித்து பாடாய் படுத்திய பூனை: அரண்டு போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News