அனல் பறக்கும் இசையில் வெளியானது 'விஸ்வாசம்' பாடல்கள்!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Dec 16, 2018, 06:05 PM IST
அனல் பறக்கும் இசையில் வெளியானது 'விஸ்வாசம்' பாடல்கள்! title=

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிக்க, டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'விஸ்வாசம்' இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘அட்ச்சி தூக்கு’ கடந்த 10-ம் தேதி வெளியானது. இமான் பாடிய இப்பாடல் 9 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இப்பாடலை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் டிராக்காக ‘வேட்டிக் கட்டு’ எனும் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டனர்.

விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு, வேட்டி கட்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் எந்த ஆர்பாட்டமும் இன்றி இப்படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

அந்த வகையில் தற்போது இப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இசை வெளியீட்டு விழா என எதுவும் இன்றி வழக்கம்போல் இணையதளத்தில் பாடல்கள் வெளியானது.

இப்படதிற்காக இசையமைப்பாளர் டி இமான், 5 பாடல்கள் இசையமைத்துள்ளார் என இத்திரைப்படத்தின் இசை உரிமம் பெற்ற லஹரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending News