புதுடெல்லி: திரைப்படங்களை பார்த்து சமுதாயம் சீர்கெட்டுப் போகிறது என்ற குற்றச்சாட்டுகளையும், வசவுகளையும் கேட்பது சகஜம். ஆனால், ஒரு திரைப்படத்தை பார்த்து ஆக்கப்பூர்வமான படைப்பை செய்துள்ள உண்மை சம்பவம் இது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட படேல் என்பவர் உருவாக்கிய ரோபோ அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. ஹாங்காங்கைச் (Hong Kong) சேர்ந்த கின் ஹான்சன் ரோபாட்டிக்ஸ் உருவாக்கிய 'சோபியா' போன்ற ரோபோவை இவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவின் பெயர் 'Shalu' (ஷாலு)…
ஜான்பூர்: ஐ.ஐ.டி பம்பாயில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் கணினி அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் தினேஷ் படேல், தமிழ் உட்பட 47 மொழிகளை பேசும் ரோபோவை உருவாக்கியுள்ளார். ஒன்பது இந்திய மொழிகளையும் 38 வெளிநாட்டு மொழிகளையும் பேசுகிறாள் ‘ஷாலு’. தமிழ், ஆங்கிலம், இந்தி, போஜ்புரி, மராத்தி, பங்களா, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம் என 9 இந்திய மொழிகள் ஷாலுவுக்கு அத்துப்படி.
Also Read | Maruti Cars பம்பர் தள்ளுபடி, ஒவ்வொரு மாடலிலும் மாபெரும் சேமிப்பு
ரோபோ பெண்ணைப் போன்றே இருக்கிறது. ஷாலுவுக்கு கோபம், சிரிப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும். ஆனால், கைகளை அசைப்பது போன்ற பல மனித சைகைகளை செய்ய முடியாது,
பிளாஸ்டிக், அட்டை, மரம், அலுமினியம் போன்ற கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி ஷாலு உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது, 50,000 ரூபாய் செலவில் ஷாலு ரோபோவை உருவாக்கிவிட்டேன் என்று படேல் சொல்கிறார்.
து ஒரு முன்மாதிரி ரோபோ என்று கூறும் படேல், ஷாலுவால் மனிதர்களை அடையாளம் காணமுடியும் என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, பிரபல திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தில் வரும் சிட்டியைப் போல, விஷயங்களை மனப்பாடம் செய்யவும், பொது அறிவு, கணிதம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் என்றும் சொல்கிறார்.
Also Read | Personal Finance: SBI Annuity திட்டத்தில் மாத வருவாய் எவ்வளவு தெரியுமா?
“ஷாலு (Shalu) மக்களுடன் பேசும், சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தும், செய்தித்தாளைப் படிக்கும், வேறி பல செயல்களையும் செய்யும். பள்ளிகளில் ஆசிரியராகவும் அலுவலகங்களில் வரவேற்பாளராகவும் பயன்படுத்த உகந்த ரோபோ” என்று படேல் கூறுகிறார்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸைப் பயன்படுத்தி ஷாலு ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் mask போன்றவற்றை பயன்படுத்தி, ரோபோவை அழகுபடுத்த முடியும் என்று படேல் கூறுகிறார். அலுவலக வேலை மற்றும் அன்றாட வீட்டு வேலைகளுக்கு ஷாலு ஒரு சரியான தேர்வாக இருக்கும் என்று படே உறுதி கூறுகிறார்.
ரோபோ ஷாலுவை கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பல துறைகளிலும் பயன்படுத்தலாம். ஷாலு அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்.
Also Read | இந்தியாவின் உள்விவகாரத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் எப்படி விசாரிக்கலாம்? இந்தியா காட்டம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR