தல தோனி ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி!! மிக விரைவிலேயே ஒரு புதிய பரிமாணத்தில் தோனியை ரசிகர்கள் காணலாம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனும், ரசிகர்களின் உளம் கவர் விளையாட்டு வீரருமான எம்எஸ் தோனி விரைவில் தொடங்கப்படவுள்ள ஒரு புது யுக கிராஃபிக் நாவலான 'அதர்வா தி ஆரிஜினில்'-ல் (MS Dhoni Atharvaa) காணப்படுவார்.
மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோஸ் இதை உருவாகிறது. ரசிகர்கள் இதன் மூலம் தோனியை இதுவரை கண்டிராத அவதாரத்தில் காணலாம்.
காமிக் பிரியர்களுக்கும், தோனி (MS Dhoni) ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் வகையில், மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட் கிராபிக் நாவலான ‘அதர்வா - தி ஆரிஜின்’ மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டது. இதில், ஒரு சூப்பர் ஹீரோவாகவும் அசத்தகான படைத் தலைவராகவும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கவுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டரை எம்எஸ் தோனி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் இன்று வெளியிட்டார்.
Atharva - The Origin Teaser Watch
மோஷன் போஸ்டரில் தோனியின் முரட்டுத்தனமான தோற்றத்தைக் காண முடிகின்றது. அதர்வாவின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிப்பதோடு, கிரிக்கெட் வீரர் தோனியின் சூப்பர் ஹீரோ ஃபர்ஸ்ட் லுக்கின் ஒரு சிறிய முன்னோட்டத்தையும் இந்த மோஷன் போஸ்டர் அளிக்கின்றது.
ALSO READ | Valimai Release date: பிப்ரவரி 24 வலிமை ரிலீஸ்... கன்ஃபார்ம் செய்தி
வாசகர்களுக்கு ஒரு ஆழ்ந்த அனுபவத்தை வழங்கும் முயற்சியில், படைப்பாளிகள் அதர்வாவின் மாய உலகத்தை உருவாக்க பல ஆண்டுகளாக விடாமுயற்சியுடன், இதற்கான கலைஞர்களின் குழுவுடன் பணியாற்றினர். வித்தியாசமான பிரபஞ்சத்திற்கு வாசகர்களை டெலிபோர்ட் செய்யும் இந்த கிராஃபிக் நாவல், ரமேஷ் தமிழ்மணி எழுதியது. திரு. எம்.வி.எம். வேல் மோகன் தலைமையில், திரு. வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு. அசோக் மேனர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட உயிரோட்டமான சித்திரங்களைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலன் விறுவிறுப்பான கதை சொல்லப்பட்டுள்ளது.
இந்த பிராஜெக்ட் குறித்து கருத்து தெரிவித்த எம்.எஸ்.தோனி, “இந்த திட்டத்துடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா - தி ஆரிஜின் (MS Dhoni Atharvaa) அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஒரு கதை. அதிவேகமான கலைப்படைப்புகளுடன் அனைவரையும் வசீகரிக்கும் கிராஃபிக் நாவல் இது. இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை சமகால அம்சங்களுடன் கொடுக்கும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு வாசகரையும் முழுமையாக திருப்திபடுத்தும், இன்னும் அதிக ஆசைகளை தூண்டச் செய்யும்" என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி, “அதர்வா - தி ஆரிஜின் (Atharva - The Origin), ஒரு கனவுத் திட்டம். இது என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று. ஒரு சிந்தனை, ஒரு யோசனையை உயிர்ப்பித்து, நீங்கள் பார்க்கப்போவது போன்ற ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்ற நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்துள்ளோம். எம்.எஸ். தோனி அதர்வாவாக உருவெடுத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எம்.எஸ். தோனியின் கதாபாத்திரம் உட்பட நாவலில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் கலைப்படைப்புகளும் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கலை உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் விரிவாகக் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் - முன் அட்டை முதல் பின் அட்டை வரை - எங்கள் ஆர்வத்திற்கு ஒரு சான்று. இந்த பிராஜெக்டின் தலைவர் திரு.எம்.வி.எம்.வேல் மோகன் மற்றும் எனது தயாரிப்பாளர்களான திரு.வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு. அசோக் மேனர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமாகியிருக்காது." என்றார்.
அதர்வா- தி ஆரிஜின் என்பது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கிராபிக் நாவலாகும். இது உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அதன் தெளிவான விளக்கப்படங்களுடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளது. இதற்கான ப்ரீ-ஆர்டர் இந்த மாதம் தொடங்கும். அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். மோஷன் போஸ்டரின் ஒரு சிறிய காட்சியை அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் காணலாம்.
ALSO READ | அஜித் மனைவி பெயரில் போலி டிவிட்டர் கணக்கு..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR