Viral Video: குரங்கு குட்டியை குளிப்பாட்டிய பெண்ணுக்கு முத்தம்... KGF படத்தை மிஞ்சிய தாய் குரங்கு!

Monkey Viral Video: தன் குட்டியை தாய் போன்று அரவணைத்து பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணிடம், அதன் தாய் குரங்கு காட்டும் பாசப்பிணைப்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 12, 2023, 07:38 PM IST
  • இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
  • இதனை லட்சக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.
Viral Video: குரங்கு குட்டியை குளிப்பாட்டிய பெண்ணுக்கு முத்தம்... KGF படத்தை மிஞ்சிய தாய் குரங்கு! title=

Monkey Viral Video: அன்பு செய்வதுதான் மிகவும் அற்புதமான மற்றும் நிறைவான உணர்வுகளில் ஒன்றாகும். அன்பு என்பது உலகளாவிய மொழியாகும், இது அனைவருக்கும் புரியும். அன்பில் தேர்ச்சி பெற ஒருவர் எந்தப் பள்ளியிலும் சேர வேண்டியதில்லை அல்லது எந்த வகுப்புகளுக்கும் செல்ல வேண்டியதில்லை. 

இயற்கை அன்னை தனது படைப்புகள் அனைத்தையும் இந்த அற்புதமான உணர்ச்சியால் ஏற்கெனவே நிறைவாக ஆசீர்வதித்துள்ளது. பல ஆண்டுகள் பிரிந்தாலும், அன்பு அந்த உறவை என்றும் மறக்க முடியாத சக்திவாய்ந்த பிணைப்புகளை உருவாக்குகிறது. அன்பிற்கும் மேலே, இந்த உலகத்தில் ஒன்று இருக்கிறது. அதற்கு எல்லைகள் எதுவும் தெரியாது. அந்த விலைமதிப்பற்ற விஷயம் வேறு எதுவும் இல்லை, தாய்மைதான். 

மேலும் படிக்க |  'அம்மா.. நான் போக மாட்டேன்' : அழ வைக்கும் குரங்கின் வைரல் வீடியோ

தாய்மை...

இந்த வைரல் வீடியோவும் அந்த தாய்மையைதான் வெளிக்காட்டுகிறது. அந்த வீடியோவில், குட்டி குரங்கை தொட்டியில் வைத்து ஒரு இளம்பெண் குளிப்பாட்டுகிறார். இதை, அந்த குட்டியின் தாய், பெண்ணின் அருகே அமர்ந்து வேடிக்கை பார்க்கிறது. குட்டி குளிப்பாட்டும் போதும், அந்த தாய் குரங்கு, பெண்ணின் உதட்டில் அன்பின் வெளிப்பாடாக முத்தமிடுகிறது. இதை பார்க்கும்போதே நம் கண்ணில் கண்ணீர் வந்துவிடும்.

அந்த பெண், குரங்கு குட்டியை முழுவதுமாக சுத்தம் செய்து, காய்ந்த டவல் மூலம் உடம்பில் இருந்து ஈரத்தை போக்குகிறார். அப்போது, தனது குட்டியை அன்போடு பார்த்துக்கொள்ளும் அந்த பெண்ணின் உதட்டில், அந்த தாய் குரங்கு மீண்டும் மீண்டும் முத்தம் கொடுக்கிறது. பின்னர், அந்த பெண் தாய் குரங்கிடம் குட்டியை ஒப்படைத்த பின்னரும் முத்தம் கொடுக்கிறது. இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும்போது, தாய்மை உணர்வின் பூரணத்தை உங்களால் உணர முடியும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த வீடியோ, @EpicVideosOnly என்ற ட்விட்டர் பயனர் மூலம் மார்ச் 6ஆம் தேதி பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த லட்சக்கணக்கான பார்வையாளர்யாளர்களை எட்டியுள்ள இந்த வீடியோவில் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

மேலும் படிக்க | கத்தியை தீட்டி பட்டையை கிளப்பும் கேங்க்ஸ்டர் குரங்கு: விக்கித்து போன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News