தமிழ் சினிமாவில் வடிவேலுவின் செத்து செத்து விளையாடுவோமா? காமெடி மிகவும் பிரபலம். வடிவேலுவை, முத்துகாளை செத்து செத்து விளையாட அழைக்கும் காமெடியை இன்றும் பலரின் ஆல்டைம் பேவரைட்டாக இருக்கிறது. அந்த காமெடியில் முத்துகாளை அழைக்கும் செத்து செத்து விளையாடுவோமா? விளையாட்டை தினம்தோறும் விளையாடிக் கொண்டிருக்கிறார் ஹிமாச்சலப் பிரதேசத்தின் பேருந்து ஓட்டுநர் ஒருவர். ஆம், அவர் அந்த விளையாட்டை எப்படி விளையாடுகிறார் என நீங்கள் இங்கு வைரலாகியிருக்கும் வீடியோவை பார்த்தால் தெரியும்.
மேலும் படிக்க | சேவலை வம்பிழுத்ததால் வந்த சேதாரம்: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
ஹிமாச்சலப் பிரதேசம் என்றாலே மலைபிரதேசங்களை கொண்ட மாநிலம். இந்த மாநிலத்தில் இருக்கும் குக்கிராமங்களுக்கு பேருந்தில் செல்வது என்பதெல்லாம் திகிலான அனுபவம். மலை முகடுகள், பள்ளத்தாக்குகள், கொண்டை ஊசி வளைவுகள் என மிக மிக ஆபத்தான பாதைகள் கொண்ட மாநிலம். இந்த பாதையில் பயணிப்பவர்கள் அனைவருமே செத்து பிளைப்பதற்கு சமம் என்று கூறலாம். அதாவது கரணம் தப்பினால் மரணம் என்பார்களே அப்படி தான் இந்த சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரின் நிலையும். அம்மாநிலத்தின் மலை பிரதேசங்களில் இருக்கும் சாலைகள் பெரும்பாலும் ஆபத்தான பாதையாகவே இருக்கின்றன. குறிப்பாக சம்பா முதல் கில்லர் வரை செல்லும் மலைப் பாதை மிகவும் ஆபத்தான மலைப் பாதையாகும்.
Himachal Pradesh pic.twitter.com/JHw2JZR6tn
— Traveling Bharat (@TravelingBharat) November 4, 2022
இந்த பாதை மலையை குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும் பள்ளத்தை ஓட்டி அமைக்கப்பட்டிருக்கும் இந்த சாலையின் குறுக்கே நீர்வீழ்ச்சியும் இருக்கிறது. ஒரு அழகான அசாத்தியமான சுற்றுலா அனுபவம் வேண்டும் என்பவர்கள் இந்த சாலையில் செல்லும் பேருந்தில் ஒருமுறையாவது தாராளமாக பயணிக்கலாம். உயிர் பயத்தை கொடுக்கக்கூடிய திரிலிங்கான அனுபவமாக நிச்சயம் இருக்கும். அந்த சாலையில் பயணிக்கும் பேருந்து ஒன்றின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. சம்பா - கில்லர் சாலையில் தினம் தினம் பாதுகாப்பாக பேருந்து ஓட்டும் ஓட்டுநர்கள் கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்தில் தாராளமாக இடம்பெறலாம் என பாராட்டு பத்திரம் வாசித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஸ்கூட்டரில் ஒளிந்திருந்த கிங் கோப்ரா, அப்புறம் என்னாச்சி? வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ