நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்: குரங்கின் வேற லெவல் மாஸ் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ

Funny Monkey Viral Video: தொப்பியை கழட்டிய நபர், தொப் என விழுந்த குரங்கின் மாஸ் ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 7, 2022, 05:18 PM IST
  • இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.
  • இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
  • இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்: குரங்கின் வேற லெவல் மாஸ் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ title=

வைரல் விடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன. குரங்குகள் சில சமயம் மரத்தின் மீது குதித்து விளையாடுவதும், சில சமயங்களில் வேறு சில விலங்குகளுடன் விளையாடுவதும், மனிதர்களுடன் அவர்களுக்கு சமமாக, அவர்களைப் போன்ற நடவடிக்கைகளை செய்வதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. சமூக ஊடகங்களில் குரங்குகளின் வீடியோக்களுக்கு தனி மவுசு உள்ளது. தற்போது குரங்கின் வேடிக்கையான ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் குரங்கு காட்டும் ரியாக்‌ஷனை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. குரங்கின் இந்த மாஸ் ரியாக்‌ஷன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தலையில் இருந்து தொப்பியை அகற்றிய நபர்

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல பயனர்களால் பகிரப்பட்டது. இந்த  வீடியோ-வின் துவக்கத்தில் ஒரு நபர் தொப்பி அணிந்துகொண்டு ஒரு குரங்கின் அருகில் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அந்த நபர் சோகமாக அமர்ந்திருக்க குரங்கு அவருக்கு ஆறுதல் கூறுவது போல முதுகில் தட்டிக்கொடுக்கிறது. 

மேலும் படிக்க | இதை பார்த்தா நம்ப மாட்டீங்க: காரை வைத்து கால்பந்து ஆடிய காளை, வைரல் வீடியோ 

அதன் பிறகு, அந்த நபர் தன் தலையில் இருக்கும் தொப்பியை அகற்றுகிறார். அவர் தொப்பியை அகற்றியவுடன் அவரது விசித்திரமான முடி வெளியே தெரிகிறது.

பயந்துபோய் பின்வாங்கிய குரங்கு

குரங்கு அந்த மனிதனின் தலைமுடியைக் கண்டவுடன் பயந்து விடுவது போல ஒரு ரியாக்‌ஷனை காட்டுகிறது. பயந்து அது பின்னோக்கி செல்கிறது. அதன் முக பாவம் காண்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது. அதன் ரியாக்‌ஷன் மிக அற்புதமாக உள்ளது. மாஸ் ரியாக்‌ஷன் காட்டும் குரங்கு ஆடையும் அணிந்துள்ளது. மஞ்சள் நிற உடையில் குரங்கு அழகாக இருக்கிறது. வீடியோவை பார்க்கும் போது அது செல்லமாக வளர்த்த குரங்கு என்றும் அந்த நபரை நீண்ட நாட்களாக அதற்குத் தெரியும் என்றும் தெரிகிறது.

தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குரங்கு விலங்குகளில் மிகவும் புத்திசாலித்தனமான விலங்காக கருதப்படுகிறது. அவை பெரும்பாலும் மனிதர்களைச் சுற்றியுள்ள இடங்களில் சுற்றித் திரிந்து வாழ்கின்றன. மனிதர்களுடன் குரங்குகள் சீக்கிரம் பழகுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி விசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News