இணையத்தை கலக்கும் மனிஷா கொய்ராலா-வின் புகைப்படம்!

பிரபல இந்திய நடிகை மனிஷா கொய்ராலால், பிரபல பாலிவுட் நடிகை நர்கிச் தத் வாழ்க்கைப் படத்தில் நடித்துள்ளார்

Last Updated : Jun 11, 2018, 12:54 PM IST
இணையத்தை கலக்கும் மனிஷா கொய்ராலா-வின் புகைப்படம்! title=

பிரபல இந்திய நடிகை மனிஷா கொய்ராலால், பிரபல பாலிவுட் நடிகை நர்கிச் தத் வாழ்க்கைப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வரும் மனிஷா, நர்கிச் தத் போன்று தான் இருக்கும் படப்பிடிப்பு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் தனது அபார நடிப்பால் தனக்கென ஓர் அடையாளத்தை பெற்றவர். 1935-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் கதாநாயகியாக அறிமுகமான படம் தமண்னா. 

 

My fav song is out now.. #karharmaidaanfateh @hirani.rajkumar @duttsanjay https://t.co/FNE2BTzbwx?ssr=true #ranbirkapoor #manishakoirala

A post shared by Manisha Koirala (@m_koirala) on

 

முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான மதர் இந்தியாவில் நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். 

பின்னர் பாலிவுட் நடிகர் சுனில் தத்தை திருமணம் செய்துகொண்டு திருமணவாழ்வில் இணைந்தார். இவரது திருமணத்திற்குப் பிறகு நடித்து வெளிவந்த ராத் ஆர் தின் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார்.

புகழின் உச்சியில் வாழ்ந்த இவர் கணையப்புற்று நோய் காரணமாக 1981-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது திரையுலக சேவையினை பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில் தற்போது இவரை பெருமை படுத்தும் விதமாக பாலிவுட் திரையுலகம் இவரது வாழ்க்கையினை திரைப்படமாக உருவாக்கி வருகிறது. இந்த திரைப்படத்தில் நர்கிசு தத்தின் கதாப்பாத்திரத்தினை பிரபல நடிகை மனிஷா கொய்ராலால் ஏற்று நடிக்கின்றார். இத்திரைப்படம் வரும் ஜூன் 29 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் படமான நடிகையர் திலகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சஞ்சை தத்தின் வாழ்க்கை படம் வெளிவர காத்திருக்கின்றது. இதற்கிடையில் தற்போது அடுத்த வாழ்க்கை திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News