டிரெண்டாகும் விஜய்சேதுபதியின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 10, 2018, 08:41 AM IST
டிரெண்டாகும் விஜய்சேதுபதியின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! title=

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான காற்று வெளியிடை. இதனையடுத்து, இயக்குநர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்தப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புராடக் ஷனுடன் இணைந்து தயாரிக்கின்றது.

இந்நிலையில், மணி ரத்னத்தின் புதிய படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் செக்க சிவந்த வானம் என்றும், தெலுங்கில் நவாப் என்றும் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செய்தி ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.

செக்க சிவந்த வானம் திரைப்படமானது கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மீத்தேன் எரிவாயு திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கதைக் களம் என்று கூறப்படுகிறது. 

சிம்பு இஞ்னியராகவும், விஜய் சேதுபதி தொழிலாளியாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அரவிந்தசாமி அரசியல்வாதியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கவுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

Trending News