வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னை மக்களை புரட்டிப்போட்டு ஒரு வழியாக சற்று ஓய்ந்திருக்கிறது. எனினும், பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவில்லை. மின்சார சேவையும், மொபைல் சிக்னலும் இன்னும் பல பகுதிகளில் கிடைக்காமல் உள்ளது. படிப்படியாக அரசு சேவைகளை மீட்டு வருகிறது. இதற்கிடையில், இணைய சேவை கிடைத்தவர்கள் பலர் தங்கள் மொபைல்களுடன் சிறிது நேரம் செலவழித்த பின்னரே பிற வேலைகளை பார்க்கச் சென்றனர்.
சமூக ஊடகங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய களேபரத்தை பார்க்க அனைவருக்கும் இருக்கும் ஆரவம் இயல்புதான். கழுத்தளவு நீரில் சிக்கித்தவித்த மக்கள், ஓடும் மழை நீரில் மிதந்த கார்கள், ஆங்காங்கே வீழ்ந்திருந்த மரங்கள், தீவுகளாக காணப்பட்ட தெருக்கள்... இவை அனைத்திற்கும் மத்தியில் அசராமல் பெய்த பேய் மழை!! இவை அனைத்தின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பதற்றத்தில் ஆழ்ந்த மனங்களை இளக வைக்க சில மீம்களையும், வினோத வீடீயோக்களையும் கூட காண முடிந்தது. அந்த வகையில் மழை நீரில் மீன் பிடித்த ஒரு நபரின் விடியோவும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
கொட்டும் மழையால் ஊரே அல்லோலப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, தான் பாட்டிற்கு சாவகாசமாய நடு ரோட்டில் மீன் பிடித்த அந்த நபரின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது. மழையால் பலர் செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சிலர் சில வித்தியாசமான செயல்களிலும் ஈடுபட்டார்கள். அவர்களில் இந்த நபரும் ஒருவர். சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள ஒரு பகுதியில் ஒரு நபர் தனது வெறும் கைகளால் ஒரு பெரிய மீனைப் பிடிப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வீடியோவின் பின்னணியில் “சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா” என்ற பலகை உள்ளது. ஆகையால், இந்த வீடியோ தரமணி சுற்றுப்புறத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கொட்டும் மழையில் நடு ரோட்டில் மீன் பிடித்த நபரின் வீடியோவை இங்கே காணலாம்
டைட்டல் பார்க் #ChennaiRain pic.twitter.com/SV6xSBTwy1
— கற்றது அரசியல் (@Learnedpolitics) December 5, 2023
வீடியோ இணையத்தில் வைரல் ஆனது
இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் 'கற்றது அரசியல்/@Learnedpolitics' என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு ஏகபட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'வெள்ளம் விதி என்றால், அதில் மீன் பிடிப்பது தான் மதி' என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். 'மீனை பார்த்தால் பொதுவான கெண்டை மீன் அல்லது புல் கெண்டை போல் இருக்கிறது... அவை நன்னீர் இனங்கள்' என மீன் பற்றி கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், 'வேளச்சேரியில் இருந்து மழையில் ஐஐடி வளாகத்திற்குள் சிறிய அளவிலான மீன்கள் வெளியேறுவதைப் பார்த்தேன், முதல் முறையாக மழையின் போது இவ்வளவு பெரிய மீனை பார்க்கிறேன்' என எழுதியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ