சீண்டிய ஆண் சிங்கம், சீறிப்பாய்ந்த பெண் சிங்கம்: சிங்கங்களின் செல்ல சண்டை, வீடியோ வைரல்

Lion Viral Video: ஆண் சிங்கம் சீண்ட, பெண் சிங்கம் சீறிப் பாயும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிங்கங்களுக்கு இடையில் நடக்கும் செல்ல சண்டை இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2022, 04:24 PM IST
  • சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் சண்டை.
  • வென்றது யார்? ஆண் சிங்கமா, பெண் செங்கமா?
  • வைரல் வீடியோ.
சீண்டிய ஆண் சிங்கம், சீறிப்பாய்ந்த பெண் சிங்கம்: சிங்கங்களின் செல்ல சண்டை, வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இணையத்தில், பாம்பு, சிங்கம், குரங்கு, யானை ஆகிய விலங்குகளுக்கு அதிக மவுசு உள்ளது. 

சிங்கத்தின் கர்ஜனையை கேட்டு காட்டில் உள்ள மற்ற விலங்குகள் அடங்கிவிடுகின்றன. சிங்கத்தின் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணமாகத்தான் அது காட்டின் ராஜாவாக கருதப்படுகிறது. சில விலங்குகளால் மட்டுமே சிங்கத்தை கட்டுப்படுத்த முடிகின்றது. எனினும், கிட்டத்தட்ட அனைத்து விலங்களும் சிங்கத்திடம் அடங்கியே இருக்கின்றன. 

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் காணப்படுகின்றன. ஆண் சிங்கம் ஆசையாக தூங்கிக்கொண்டிருக்கும் பெண்சிங்கத்தின் அருகில் செல்கிறது. ஆனால், பெண் சிங்கம் இதற்கு அளித்த பதிலை ஆண் சிங்கம் எதிர்பார்க்கவில்லை. 

மேலும் படிக்க | சாமி சாமி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சிறுமி: ஷேர் செய்த மந்தனா, வைரலான வீடியோ 

சிங்கத்தின் கோபம்

காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோவில், ஒரு பெண் சிங்கம் காட்டில் மிகுந்த மகிழ்ச்சியுடன் தூங்கிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. தூரத்தில் நிற்கும் ஆண் சிங்கம் அதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. பின், ஆண் சிங்கம் மெதுவாக பெண் சிங்கத்திடம் வருகிறது. அதை சீண்டுகிறது. ஆண் சிங்கத்தின் இந்த செயலால் பெண் சிங்கத்தின் தூக்கம் கலைகிறது. அதற்கு தலைக்கு மேல் கோபம் வருகிறது. சில வினாடிகளுக்குப் பிறகு எல்லாம் சாதாரணமாகிவிடுகிறது. 

சீண்டிய ஆண் சிங்கத்தின் வீடியோ:

சிங்கத்தின் மீது எதிர் தாக்குதல்

ஆண் சிங்கத்தின் மேல் பெண் சிங்கம் கோபப்பட்ட விதம் உண்மையிலேயே பீதியை வரவழைக்கிறது. ஆண் சிங்கம் பெண் சிங்கம் தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ @bkbuc என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களையும், ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | காதலியை கரெக்ட் பண்ண நடுரோட்டில் காதலன் செய்த செயல்: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News