புதுமணப் பெண்ணான காஜல் அகர்வாலிடம் 'கஞ்சத்தனம் வேண்டாம் காஜல் அகர்வால்' என்று பிரபல நடிகையும் திரைப்பட தயாரிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லட்சுமி மஞ்சு சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. புதுமணப் பெண்ணான காஜல் அகர்வாலிடம் இப்படி சொன்னதற்கான காரணம் என்ன என்பதை லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.
உண்மையில் காஜல் அகர்வாலும் லட்சுமி மஞ்சுவும் நல்ல நண்பர்கள், மிகவும் நெருங்கியவர்கள். தனது ஆருயிர் தோழியை பகிரங்கமாக கஞ்சத்தனம் காட்டாதே என்று சொன்னதால் இந்த விஷயம் பலரின் கவனத்தையும் பெற்றது.
நடிகர் ராணா டகுபதியின் யூ-ட்யூப் (YouTube) சேனலான South Bayஇல் Coming Back to Life என்ற லட்சுமி மஞ்சுவின் நிகழ்ச்சி நவம்பர் 15 ஆம் தேதி திரையிடப்பட்டது.
தயாரிப்பாளர்-நடிகை-நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக பரிணாமங்களைக் கொண்ட லட்சுமி மஞ்சு, தொற்றுநோய் மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை மனதில் வைத்து நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில், நெருங்கிய தோழியும், புதுமணப் பெண்ணுமான காஜல் அகர்வாலிடம் கஞ்சத்தனம் வேண்டாம் என்று சொன்னது ஏன்? அவருக்கு நீங்கள் என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
இது பற்றி மனம் திறந்து பேசிய லட்சுமி மஞ்சு, காஜல் அகர்வால் பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார். நான் அவருக்கு என்ன ஆலோசனை சொல்வது? மாறாக அவரிடமிருந்து நான் தான் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று சொன்னார். நான் காஜல் அகர்வாலிடம் கஞ்சத்தனம் வேண்டாம் என்று சொன்னது உண்மைதான்.
அதற்கு காரணம் என்ன தெரியுமா? தொற்றுநோய் தாக்கம் இருக்கும் போது எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, அனைவரையும் அழைக்காமல் விட்டு விட்டாயே…. எனவே தொற்றுநோய் பாதிப்பு முடிந்ததும், அனைவருக்கும் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும். கஞ்சத்தனம் செய்யாதே என்று சொன்னேன் என்று சொன்னார் லட்சுமி மஞ்சு.
இதைத் தவிர தனது நிகழ்ச்சியில் வேறுபல கலக்கலான விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்ட லட்சுமி மஞ்சு, தனது நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் ஜி, அமீர்கான், ஜானி டெப், ஓப்ரா வின்ஃப்ரே என பலரை பேட்டி காண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி | வாழ்க்கைத்துணையே எல்லாம் என்று அன்பால் கசிந்துருகும் காஜல் அகர்வால்…
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR