விராட் கோலி-யை பயமுறுத்திய அனுஷ்கா சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, தனது மனைவி நடிப்பில் வெளிவந்த "பரி" திரைப்படத்தினை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்!

Last Updated : Mar 3, 2018, 08:12 PM IST
விராட் கோலி-யை பயமுறுத்திய அனுஷ்கா சர்மா! title=

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, தனது மனைவி நடிப்பில் வெளிவந்த "பரி" திரைப்படத்தினை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்!

பரி படத்தில் அனுஷ்கா சர்மாவின் நடிப்பு அனைவரையும் பிரமப்பில் ஆழ்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கள் திருமணத்திற்கு பிறகு வெளியாகும் அனுஷ்காவின் முதல் படம் இது. எனவே கனவர் என்ற உரிமை கொண்டு விராட் கோலி பாராட்டும் முதல் தருணமும் இது.

படத்தினை பார்த்த அவர், இப்படத்தினை குறித்தும் படத்தில் அனுஷ்காவின் நடிப்பு குறித்தும் கருத்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

"நேற்று இரவு படத்தை பார்த்தேன், என் மனைவின் சிறந்த உழைப்பின் வெளிபாடு இது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஓர் நல்ல படத்தை பார்த்துள்ளேன், கொஞ்சமாக பயந்தேன், உன்னை நினைக்கையில் பெருமை மட்டுமே மிச்சம்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று வெளியான தகவலின் படி இத்திரைப்படமானது முதல் நாள் வசூலாக ரூ.4.36 கோடி குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News