உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை $44 பில்லியனுக்கு வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழு விவரங்களை அறிந்த பின்னரே இந்நிறுவனத்தை வாங்கப்போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்து டிவிட்டர் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை கைவிடுவதாகவும், போலி கணக்குகள் குறித்த தகவலை ட்விட்டர் நிறுவனம் கொடுக்க தவறவிட்டது என்றும் கூறியிருந்தார்.
இதனால் எலான் மஸ்க், ஒப்பந்தத்தை மீறியதற்காக, அபராத கட்டணமாக $1 பில்லியன் செலுத்த வேண்டும் என்றும், அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. இதற்கெதிராக எலான் மஸ்கின் வழக்கறிஞர் கூறுகையில், எலான் மஸ்க் கடந்த இரண்டு மாதங்களாக போலி அல்லது ஸ்பேம் கணக்கில் பற்றிய விவரங்களை அளிக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் அவர்கள் நிறுவனம் அதற்கு பதிலளிக்கவில்லை. மஸ்கின் கோரிக்கையை சில காரணங்களால் புறக்கணித்துவிட்டனர் என்று கடிதம் வாயிலாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க | எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்! காரணம் இது தான்
இந்நிலையில், இதற்கு பதிலடியாக டிவிட்டர் எலான் மஸ்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது ட்விட்டர் கணக்கை சஸ்பெண்ட் செய்துள்ளதாக சமூக வலை தளத்தில் தகவல் வைரலாக பரவியது. ஒரு டிவிட்டர் கணக்கில் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
they suspended @eIonmusk fr??
— surya (@sdand) July 9, 2022
டிவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்ட லிங்கில் கிளிக் செய்தவுடன், அது எலான் மஸ்கின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட Twitter கணக்கின் பக்கத்திற்கு கொண்டு சென்றது.
ஆனால் அதனை கூஎந்த கவனிக்கும் போது Elon Musk என்ற கணக்கில் பெயரில், E என்ற பெரிய எழுத்திற்கு பதிலாக, சிறிய e இருப்பதைக் காணலாம். இது அனைவரையும் ஏமாற்ற பதிவு செய்யப்பட்ட டிவீட் என்பதை பலர் பின்னர் அறிந்து கொண்டனர்.
மேலும் படிக்க | பிரதமர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே 'வேலை தேடும்' போரிஸ் ஜான்சன்
மேலும் படிக்க | பிரிட்டன் புதிய பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்???
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR