I am violence: திரைக்கு வருவதற்கு முன்னரே சமூக ஊடகங்களில் சக்கைபோடு போடும் KGF 2 யஷ்

கேஜிஎஃப் நாயகன் யஷ் மற்றும் நிஹாரிகா பேசும் ’வயலன்ஸ்’ பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  'I am violence' என்று நிஹாரிகா சொல்லும் டயலாக் பலரையும் கவர்ந்துள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 14, 2022, 08:25 AM IST
  • KGF 2 இன்று ரிலீஸ்
  • I am violence என்று சமூக ஊடகங்களில் மிரட்டும் யஷ்
  • வன்முறைக்கு என்னை பிடிக்கும் கலாய்க்கும் கேஜிஎஃப் கதாநாயகன்
I am violence: திரைக்கு வருவதற்கு முன்னரே சமூக ஊடகங்களில் சக்கைபோடு போடும் KGF 2 யஷ் title=

இன்று கேஜிஎஃப் 2 திரைப்படம் வெள்ளித்திரையில் ரிலீசாகும் நிலையில், கதாநாயகன் ஸ்டார் யஷ் மற்றும் நிஹாரிகா பேசும் ’வயலன்ஸ்’ பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  'I am violence' என்று நிஹாரிகா சொல்லும் டயலாக் பலரையும் கவர்ந்துள்ளது

கேஜிஎஃப் 2 கதாநாயகன் யஷ் மற்றும் அவரிடம் நிஹாரிகா பேசும் 'I am violence' உரையாடல் வீடியோ வீடியோ வெளியானதில் இருந்தே வைரலாகி, 6.37 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.

அனைவராலும் கவும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப் அத்தியாயம் 2 ஏப்ரல் 14 ஆம் தேதியான புத்தாண்டு தினமான இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரிலீசாகும் இன்றே, கேஜிஎஃப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தான் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!

கேஜிஎஃப் திரைப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்-க்கு திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  கேஜிஎஃப்: அத்தியாயம் 1 வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று வெளியாகிறது. ரசிகர்களின் மூன்றாண்டு காத்திருப்பு இந்த தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் முடிவுக்கு வருகிறது.

கேஜிஎஃப் 2 அதன் வெளியீட்டிற்கு முன்பே சாதனைகளை முறியடித்து வருகிறது. யஷ் ரசிகர்கள், நாயகன் ராக்கியின் இன்னொரு அவதாரத்தை திரையில்  காண காத்திருக்கும் நிலையில், படத்திற்கான டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் பிரமாண்ட வெளியீட்டிற்கு முன்னதாக, ஆன்லைனில் அதிக பார்வையாளர்களை கொண்ட கதாநாயகர்களின் பட்டியலில் யஷ் இணைந்தார், வைரலாகும் வீடியோ நெட்டிசன்களின் எதிர்பார்ப்பைக் காட்டுகிறது.

மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

வைரலான வீடியோ இதுதான்...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Niharika Nm (@niharika_nm)

 

நிஹாரிகா என்எம் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டவர். அவரது சமீபத்திய வீடியோவில், பிரபலமான 'வயலன்ஸ்' உரையாடலுக்கு ஒரு திருப்பத்தை அளிக்கிறார், கேஜிஎஃப் நட்சத்திரம் யஷ் 'I am violence’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள வீடியோவில் நிஹாரிகாவுடன் இருக்கிறார். 

“வன்முறை. வன்முறை. வன்முறை. எனக்கு அது பிடிக்கவில்லை, நான் தவிர்க்கிறேன், ஆனால் வன்முறைக்கு என்னை பிடிக்கும்!"  இது KGF திரைப்படத்தின் பிரபலமான வசனம்.

நிஹாரிகா தனது கைகளால் ஒரு பாட்டிலைத் திறக்க முயற்சிக்கும் போது கூலாக அந்த டயலாக்கை திரும்பத் திரும்பச் சொல்வதுடன் வீடியோ தொடங்குகிறது. கைகள், கால்கள் மற்றும் பற்களால் பாட்டிலை திறக்க முயன்றும் அது முடியவில்லை.

மேலும் படிக்க | RRR படத்தையே ஓரங்கட்டிய KGF-2: யப்பா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

பல முயற்சிகளுக்குப் பிறகும் பாட்டிலை திறக்க முடியாமல் திணறும் அவருக்கு அருகில் வரும் ‘ வன்முறைக்கு என்னை பிடிக்கும்’ என்ற டயலாக்கை முடித்துவிட்டு, விரலை சுண்டி பாட்டிலை திறக்கிறார்.

பாட்டிலை திறந்தவுடன் அதை எடுத்துக் கொண்டு செல்கிறார் யஷ், அதை எடுத்துக்கொண்டு செல்கிறார்.  பாட்டிலுடன் செல்லும் யஷ்ஷின் பின் ஓடும் நிஹாரிகா, ‘என் பெயர் வன்முறை, என்னைத் தவிர்க்காதீர்கள் ஐயா’ என்று ஒல்லிக் கொண்டே யஷ்ஷை பின் தொடர்ந்து ஓடுகிறார். இந்த வேடிக்கையான வீடியோ நெட்டிசன்களுக்கு பிடித்துப் போனதால் 6.37 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப்: அத்தியாயம் 2 இல் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், அனந்த் நாக் மற்றும் அச்யுத் குமார் நடித்துள்ள கேஜிஎஃப் 2, உலகம் முழுவதும் பல ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | அதிக பணி நேரம், 6 நாட்கள் வேலை: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷரீபின் அதிரடி முடிவுகள் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News