பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது நடிகை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து கங்கனா செய்திருந்தது தான் அவரது கணக்கில் இருந்து வெளியான கடைசி ட்வீட் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கனா ரனவுத்தின் ட்விட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டதற்கு காரணம், மம்தா பானர்ஜி குறித்து அவர் தெரிவித்த கருத்தின் மீதான நடவடிக்கையா என்ற கேள்விகள் எழுகின்றன.
Accounts of tεrrorist organisations: not suspended
Accounts of people like Sharjeel Usmani who celebrate death: not suspended.
Look whose account this "unbiased" twitter suspended!
Kangana Ranaut, the only celebrity who spoke about violence committed against Hindus in Bengal pic.twitter.com/FbGQlBrqAl
— Bharadwaj (@BharadwajSpeaks) May 4, 2021
அண்மையில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மம்தா பானர்ஜி குறித்து கருத்து தெரிவித்ததை அடுத்து கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கங்கனா ஒரு ட்வீட்டில் மம்தா பானர்ஜி தொடர்பான ஒரு மோசமான வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இப்போது அதிகாரப்பூர்வமாக, கங்கனாவின் ட்விட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கங்கனா ட்வீட்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (TMC) மற்றும் மம்தா பானர்ஜிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
Also Read | UKவில் இருந்து சென்னைக்க்கு வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்…
கங்கனா ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார், அதன்படி பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் தேர்தலுக்குப் பிறகு தாக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் கங்கனாவின் ட்வீட் பல சர்ச்சைகளை ஏற்கனவே எழுப்பியிருக்கிறது.
சிவசேனாவுக்கு எதிராகவும் கங்கனாவின் கருத்துகள் வெளியாகியிருந்தன.
அரசியல் குறித்த கங்கனாவின் வெளிப்படையான கருத்து பரிமாற்றம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. மம்தாவின் டி.எம்.சி, சிவசேனா என அரசியல் கட்சிகள் மீதும், தலைவர்கள் மீதும் தனது அப்பட்டமான கருத்துகளை அதிரடியாக வெளியிடுவது கங்கனாவின் ஸ்டைல்.
அவரது இந்த அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடக தளமான டிவிட்டர் கங்கனாவின் கணக்கை முடக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
Also Read | TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR