இன்ஸ்டாகிராமில் ஜோதிகா என்ட்ரி: முதல் போஸ்ட்டே அட்டகாசம்!

இன்ஸ்டாகிராம் வந்துள்ள நடிகை ஜோதிகாவை ரசிகர்கள் பலரும் உச்சாகமாக வரவேற்று உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2021, 12:39 PM IST
இன்ஸ்டாகிராமில் ஜோதிகா என்ட்ரி: முதல் போஸ்ட்டே அட்டகாசம்! title=

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து பிரபலமான கதாநாயகியாக இருப்பவர் நடிகை ஜோதிகா. கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.  திருமணம் செய்து கொண்டப்பின் சில வருடங்கள் கழித்து ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் நடிகை ஜோதிகாவின் (Jyothika) நடிப்பில் உடன்பிறப்பே படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் ஜோதிகா சமூக வலைத்தள (Social Media) பக்கங்களிலும் தலை காட்டாமல் இருந்த நிலையில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் (Instagram) இணைந்துள்ளார். தன்னுடைய முதல் பதிவில் முதன்முறையாக சோசியல் மீடியாவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜோதிகா, தன்னுடைய ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த நிறைய நல்ல விஷயங்களை பகிர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ | வில்லனே பார்த்து மலைக்கும் சூப்பர் சூரர் சூர்யா @சூரரைப் போற்று!

மேலும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள ஜோதிகாவை அவரது கணவரும் நடிகருமான சூர்யா வரவேற்றுள்ளார். அவர் தன்னுடைய கமெண்டில் என் மனைவி வலிமையானவள். முதன்முறையாக உன்னை இன்ஸ்டாவில் பார்ப்பது த்ரில்லாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் வந்துள்ள ஜோதிகாவை வாழ்த்தி தெரிவித்து வருன்றனர்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

 

முதல் பதிவாக அவர் இமயமலையில் தேசியக் கொடியை ஏந்திய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் காஷ்மீரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மிகவும் அபூர்வமானது என்றும் தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்த இந்தப் புகைப்படம் தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

இதற்கிடையில் நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய முதல் நாளிலேயே அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். 

ALSO READ | சிறப்பான செயல்!! தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News