கோடை காலம் மக்களை வாட்டி வருகிறது. சில இடங்களில் தற்போது மழை பெய்து வந்தாலும் கூட, வெப்பம் இன்னும் பல இடங்களில் அதிகமாகவே. உள்ளது. அதிலும், வட இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படும் என IMD ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தலை நகர் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள, காசியாபாத், குருகிராம் ஆகிய NCR பகுதிகள் உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்நிலைல், சில நகரங்களை, குறிப்பாக டெல்லி-என்சிஆர் மற்றும் ஹைதராபாத்தை ஒப்பிடும் வீடியோ ரீல் வைரலாகி வருகிறது.
நேற்று, தலைநகர் டெல்லியின் நஜாப்கரில் 47.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதையெல்லாம் மீறி வேலைக்கு செல்லும் மக்கள் அலுவலகத்திற்கும் பணியிடத்திற்கு போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். வெளியில் செல்லும் போது வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் கேப், டாக்சி போன்ற போக்குவரத்து வசதியை எல்லோராலும் பயன்படுத்த முடியாது. அதிக கட்டணமாக இருப்பதால் சாமானியர்கள் பலருக்கு பொது போக்குவரத்தை நம்பி இருக்கும் நிலை தான் உள்ளது. எனினும், ஆட்டோ ரொக்ஷா என்பது எளிய மக்கள் பயணிக்கும் வகையில் இருக்கும்.
ஏசி வசதி கொண்ட கார், பஸ் ஆகியவற்றை நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தென்னிந்தியாவின் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் தெருக்களில் ஏசி வசதி கொண்ட ஆட்டோவைக் காணலாம்.
உண்மையில், சமூக ஊடக தளமான Instagram இல் thisisgurugram என்ற கணக்கிலிருந்து ஒரு வீடியோ ரீல் வெளியிடப்பட்டது. வீடியோவில், ஹைதராபாத் தெருக்களில், கூலர் பொருத்தபப்ட்ட மஞ்சள் நிற ஆட்டோ ரிக்ஷா ஒன்று ஓடுவதைக் காணலாம். மற்றொரு ஆட்டோவில் புற்களைக் கொண்ட ஈர சாக்கு மூட்டைகளால் மூடப்பட்ட ஆட்டோ ஓடுவதைக் காணலாம். இந்த வீடியோவில், 'வெப்பநிலை 45 டிகிரியை தாண்டியுள்ளது. குருகிராம் மற்றும் என்சிஆர் ஆட்டோ ஓட்டுநர்கள், இந்த முறையை கடைபிடிக்கலாம். ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ