இந்திய அண்டர் 19 அணியின் வேகப் பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்தில் ரேடியோக்கள் விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2 ஆவது டெஸ்ட் போட்டி, ‘கிரிக்கெட்டின் மெக்கா’ என கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்திற்கு வெளியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ரேடியோக்கள் விற்பதை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் புகைப்படம் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிரிந்துள்ளார்.
அந்த பதிவில், “லார்ட்ஸ் மைதானத்தில் ரேடியோ விற்றுக்கொண்டிருப்பது யாரென்று பாருங்கள். இன்று... 50 ரேடியோ விற்றுவிட்டது, இன்னும் கொஞ்ம் மட்டுமே மீதம் உள்ளது... முந்துங்கள்” என்று பதிவிட்டு அர்ஜுன் டெண்டுல்கருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
Look who selling radios @HomeOfCricket today.. sold 50 rush guys only few left junior @sachin_rt #Goodboy pic.twitter.com/8TD2Rv6G1V
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 11, 2018
இங்கிலாந்தில் இருக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் விராட் கோலி, முரளி விஜய் உள்ளிட்டோருக்குப் பயிற்சியின் போது பந்து வீசும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது!