குழாய் சண்டை தோத்துறும்... கல்லூரி பெண்களின் அடிதடி சண்டையை பாருங்க - வைரல் வீடியோ!

Girls Fighting Viral Video: கல்லூரியில் பயிலும் இரு பெண்கள் கல்லூரி வளாகத்திலேயே கடுமையான அடிதடி சண்டையில் ஈடுபடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 17, 2023, 07:21 PM IST
  • இந்த வீடியோ X தளத்தில் வைரலாகி வருகிறது.
  • சுமார் 206.7K வியூஸ்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.
  • பலரும் இதில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
குழாய் சண்டை தோத்துறும்... கல்லூரி பெண்களின் அடிதடி சண்டையை பாருங்க - வைரல் வீடியோ! title=

Girls Fighting Viral Video: ஒருவரின் வாழ்க்கையில், கல்லூரி பருவம் என்பது எண்ணற்ற நினைவுகள் கொண்டதாக இருக்கும். நம் வாழ்வை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, மிகவும் சுவாரஸ்யமான மற்றும் குறிப்பிடத்தக்க காலகட்டங்களில் ஒன்றாகவும் கல்லூரி காலகட்டம் இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கல்லூரி நாட்களில், நம்மில் பலர் சிறிய மற்றும் பெரிய தகராறுகளைக் கண்டிருக்கலாம். பொதுவாக, துறுதுறுவென இருக்கும் இளைஞர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் நண்பர்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கைக்கலப்பில் ஈடுபடுவதை நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள். இருப்பினும், பெண் மாணவிகள் இடையே கடுமையான அடிதடி சண்டையை காண்பது என்பது மிக மிக அரிதான நிகழ்வு என்றே பலரும் சொல்வார்கள்.

கல்லூரி பெண்கள் சண்டை

அந்த வகையில், தற்போதைய வைரல் வீடியோ ஒன்றில், கல்லூரிப் பெண்கள் இருவர் கடுமையான அடிதடியில் ஈடுபடும் சம்பவத்தை நீங்கள் காணலாம். அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதிச்செய்யப்படவில்லை. இரு பெண்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கல்லூரி வளாகத்தில் பெரும் மோதலாக மாறியது. தற்போது இந்த சண்டையின் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

கல்லூரி வளாகத்திற்குள் இரண்டு பெண் மாணவிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்துகின்றனர். மேலும், ஒருவரை ஒருவர் அடித்த கீழே தள்ள முயற்சிப்பதை, சுற்றியிருந்த மற்ற மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அந்த வீடியோவில் தெரிந்தது. இந்த வீடியோ X தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. செப். 13ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த பதிவில், "நொய்டாவின் அமிட்டி யுனிவர்சிட்டிக்குள் இரண்டு பெண்களுக்கு இடையே மோதல், எதற்கு என தெரியவில்லை" என்ற தலைப்புடன், @gharkekalesh என்ற ஒரு X (முன்னர் ட்விட்டர்) தளத்தின் பயனரால் அந்த வீடியோ பகிரப்பட்டது.

மேலும் படிக்க | பைக்கில் முத்தம் கொடுத்துக்கொண்டே சென்ற ஜோடி! வைரலாகும் வீடியோ!

அனல் பறக்கும் கமெண்ட்ஸ்

அமிட்டி பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஜீ தமிழ் நியூஸ் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை என்பது இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

இந்த வீடியோ X தளத்தில் பகிரப்பட்டதில் இருந்து இதுவரை 206.7K வியூஸ்களை குவித்துள்ளது, மேலும் இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோ X பயனர்களை தங்கள் கருத்துக்களை கமெண்ட் பிரிவில் வெளிப்படுத்தத் தூண்டியது, பல நகைச்சுவையான கிளிப் மற்றும் வேடிக்கையான மீம்களைப் காண முடிகிறது.

மற்றொரு வீடியோ

சமீபத்தில், இரு பெண்கள் சண்டையின் மற்றொரு வீடியோ இணையத்தில் பரவியது, அதில் இரண்டு பெண்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காணலாம், அது விரைவாக முடியை இழுக்கும், முஷ்டியை முறுக்கும் மல்யுத்தப் போட்டியாக மாறியது. வீடியோக்களில், இரண்டு பெண்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காணலாம், அது விரைவில் உடல் ரீதியான சண்டையாக மாறும். இரு பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியை இழுத்து, அடித்து தள்ள, மற்றும் ஒருவரையொருவர் நோக்கி விரல்களைக் காட்டுவதை மற்ற மாணவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.

@gharkekalesh என்ற அதே X தளத்தின் பயனர் மூலம் தான் வீடியோ கிளிப்புகள் பகிரப்பட்டன, "ரூர்க்கி பொறியியல் பல்கலைக்கழகத்தில் இரண்டு பெண்களுக்கு இடையேயான மோதல், இது ஒரு பையனுக்காக இருக்கலாம்" என்ற தலைப்புடன் வெளியானது. இருப்பினும், ஜீ தமிழ் நியூஸ் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியவில்லை என்பது இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

மேலும் படிக்க | பிடிக்க வந்தவரை கடிக்க பாயும் ராட்சத நாகம்..! அய்யய்யோ..என்னாச்சு? வைரல் வீடியோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News