நடிகர் சிம்புவின் பிறந்தநாள் பரிசாக 5 மொழிகளில் வெளியானது 'மாநாடு' திரைப்பட Teaser

நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! சிலம்பரசனுக்கு வித்தியாசமாய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் திரைப்பட நிறுவனம்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 3, 2021, 04:05 PM IST
  • சிம்பு என்னும் சிலம்பரசனின் பிறந்தநாள் இன்று
  • திரைப்பட நிறுவனம் வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்து வெளியிட்டுள்ளது
  • சிம்பு நடிக்கும் மாஸ்டர் பட டீசர் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியீடு
நடிகர் சிம்புவின் பிறந்தநாள் பரிசாக 5 மொழிகளில்  வெளியானது 'மாநாடு' திரைப்பட Teaser  title=

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'மாநாடு' படத்தின் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. 

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இஸ்லாமியராக சிலம்பரசன் நடித்துள்ள ‘மாநாடு’ அரசியல் பிண்ணணியில் உருவாகும் திரைப்படம்.

சிலம்பரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் டீசர் வெளியிடப்பட்டது. அதை ஒவ்வொரு மொழியிலும் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார். மாநாடு தமிழ்பட டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டார். 

தமிழில் மாநாடு என்று பெயரிடப்பட்டிருக்கும் சிம்புவின் இந்தத் திரைப்படம், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ரீவைண்ட் என்ற பெயரில் வெளியாகிறது.

Also Read | விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த Rihanna - முட்டாள் என சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை கங்கனா

இன்று இந்தியில் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் ரீவைண்ட் டீசரை வெளியிட்டார். அதேபோல், தெலுங்கில் நடிகர் ரவிதேஜா, மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், கன்னடத்தில் நசிகர் கிச்சு சுதீப் ஆகியோர் வெளியிட்டனர்.

கொரோனா வைரஸ் பரவியதால் மாநாடு படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாத நிலையில் அதை பயன்படுத்தி சிம்பு தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து பத்து வயது குறைந்தது போல இளமையாக காட்சியளிக்கிறார்.  

Also Read | சித்ராவின் மரணம் எப்படி நடந்தது? நிபுணர் குழு அறிக்கையில் அதிர்ச்சி..

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR  

Trending News