இணையத்தை தெறிக்கவிட்ட மாப்பிள்ளை எண்ட்ரி: வேற லெவல் வைரல் வீடியோ

Viral Video: சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள வீடியொ ஒன்றில் மாப்பிள்ளை எண்ட்ரி கொடுக்கும் விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 15, 2023, 07:54 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் imjustbesti என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
இணையத்தை தெறிக்கவிட்ட மாப்பிள்ளை எண்ட்ரி: வேற லெவல் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. இந்த வீடியோக்களில் பெரும்பாலும் நாம் மணமகன் மற்றும் மணமகளுக்கு இடையில் நடக்கும் அன்பான பாச பரிமாற்றங்களை காண முடிகின்றது. இது மட்டுமின்றி, இவர்களுக்கு இடையில் நடக்கும் கியூட் சண்டைகளையும், வேடிக்கைகளையும் கூட பல வீடியோக்களில் நாம் பார்த்துள்ளோம்.

திருமணம் என்பது அனைவருக்கும் மறக்க முடியாத தருணம். திருமணங்களில் இருக்கும் சடங்குகளும், பாரம்பரியமும் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைக்கப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு திருமணத்தின் மிக விசேஷமான தருணம் மாப்பிள்ளை அழைப்பு அதாவது மாப்பிள்ளை ஊர்வலமாக கருதப்படுகிறது. அதில் மணமகன் தனது திருமணத்தில் கலந்துகொள்ள பல வித வாத்தியங்காள் முழங்க, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மணமண்டபத்திற்கு வருகிறார். பொதுவாக மாப்பிள்ளை கார் அல்லது குதிரைகளில் வருகிறார்கள். எனினும், இதிலும் பல புதுமைகள் வந்துவிட்டதை நாம் அவ்வப்போது இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் காண்கிறோம். 

சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள வீடியொ ஒன்றில் மாப்பிள்ளை எண்ட்ரி கொடுக்கும் விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வண்ணம் இது உள்ளது. வைரலான இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு மணமகன் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திருமண மண்டபத்திற்கு செல்வதை காண முடிகின்றது. அவரும் குதிரையில் தான் செல்கிறார், ஆனால் அங்குதான் ட்விஸ்டே உள்ளது. நிஜ குதிரைக்கு பதிலாக மணமகன் ஒரு பொம்மை குதிரை மீது சவாரி செய்கிறார். அவருடன் வரும் உறவினர்களும் நண்பர்களும் மாப்பிள்ளையின் வேடிக்கையான ஊர்வலத்தை பார்த்து அதை ரசித்து சிரிக்கிறார்கள். இதை வீடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | Viral Video: அடக் கொடுமையே... பேக்ட்ரியில இப்படித் தான் ஐஸ் கட்டி தயாரிக்கறாங்களா...!

மாப்பிள்ளையின் வித்தியாசமான ஊர்வலத்தை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by imjustbesti (@imjustbesti)

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் imjustbesti என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

"மணமகன் மிக நல்லவராக, யதார்த்தமானவராக காணப்படுகிறார்." என்று ஒரு பயனர் கூறியுள்ளார். "யாரை பற்றியும் கவலைப்படாமல் தான் விருப்பப்பட்டதை செய்யும் இந்த குணம் அனைவருக்கும் வராது" என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நாகப்பாம்பை வெச்சு செய்யும் குரங்கு: பீதியுடன் பார்க்கும் நெட்டிசன்ஸ்.. வைரல் விடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News