Cutest bride: இவ்ளோ அழகான மணமகளா? திருஷ்டி சுத்திப்போடுங்க! வைரல் மணமகள்

இவ்வளவு அழகான மணமகளை பார்த்ததுண்டா? இல்லை என்பதே உங்களுடைய பதிலாக இருக்கும் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2022, 10:59 AM IST
  • இவ்ளோ அழகான மணமகளா? திருஷ்டி சுத்திப்போடுங்க!
  • மேக்கப்புக்கு முன்னும் பின்னும்!
  • அழகுக் கலையில் அற்புதத்தில் மிளிரும் புது மணப்பெண்
Cutest bride: இவ்ளோ அழகான மணமகளா? திருஷ்டி சுத்திப்போடுங்க! வைரல் மணமகள் title=

புதுடெல்லி: மணமகளின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் திருமணத்திற்காக தயாராக  மணப்பெண் அழகு நிலையத்திற்கு  சென்றுள்ளார், ஆனால் அவர் திரும்பி வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகிறது.  

திருமணத்திற்கு செல்பவர்கள், மணப்பெண்ணின் அலங்காரத்தை (Makeup of the Bride) பார்ப்பதில் ஆஅலாக இருப்பார்கள். ஆனால், மணமகளின் அழகைப் பார்த்து, அதை வீடியோவாக வெளியிட்டு பாராட்டுவது குறைவு. 

எந்தவொரு பெண்ணும் தனது திருமண நாளில் மிகவும் அழகாக இருக்க விரும்புகிறாள், அதற்காக பிரத்யேகமாக ஆடைகளை முன்கூட்டியே தயார் செய்யப்படுகிறது. மேலும், திருமண மேக்கப் எப்படி, எங்கிருந்து செய்வது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இப்போது வைரலாகும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகிறது. 

மணமகளின் உயரம் குறைவாக இருப்பதும் ஆச்சரியமானது தான்.  

உயரம் குறைந்த ஒருவரைக் கண்டால் அவர்களின் திறமையும் பண்பும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உருவக்கேலி செய்வது தவறு என்ற வாதங்கள் வலுத்துவருவதும், அதற்கான கண்டனங்கள் அதிகரித்து வருவதும் மிகவும் ஆக்கப்பூர்வமான விஷயம்.

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் மணப்பெண் சற்று குட்டையாக இருந்தாலும், அழகில் பேரழகியாக இருக்கிறார். 

ALSO READ | மேடையில் மணமகன் மடியில் விழுந்த நண்பன்! வைரல் வீடியோ!

திருமணத்தன்று அந்த பெண், மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு வெளியே வந்த பிறகு பார்த்த விழிகள், பார்த்தபடியே பூத்துக் கிடந்ததனவாம்!  

மணமகளின் அழகை என்ன சொல்லி வர்ணிப்பது? என்ன சொல்லி பாடுவது என்று ஹீரோக்களே திகைத்து நிற்பார்கள் என்ற கமெண்டுகள் சமூக ஊடகங்களில் தூள் பறக்கின்றன. உயரம் குறைவான மணமகள் வீடியோ சமூக ஊடகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. 

இந்த வீடியோவை ராஜ் மேக்ஓவர்ஸ் நானக்மட்டா என்ற கணக்கு இன்ஸ்டாகிராமில் (Instagram) பதிவேற்றியவுடன், மக்கள் அதை மிகவும் விரும்பினர். 9 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர், அதே நேரத்தில் இது மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. 

ALSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News