Shark Wound: இது சுறாவின் காதல் காயமா? இல்லை மோதல் வடுவா? வீடியோ வைரல்

பற்களால் கடி வாங்கிய சுறாவின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகிறது. இது காதல் கடியா இல்லை மோதல் தாக்குதலா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 7, 2022, 07:40 AM IST
  • ஆயிரம் டன் எடை இருந்தாலும் காதல்னா கடி தான்
  • விலங்கா இருந்தா என்னா? மோதலுக்கும் அஞ்சாத சுறாக்கள்
  • சுறாவின் பெரிய காயத்தை பார்க்கும் அரிய வாய்ப்பு
Shark Wound: இது சுறாவின் காதல் காயமா? இல்லை மோதல் வடுவா? வீடியோ வைரல் title=

தற்போது சமூக ஊடகங்களில் ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியமான வீடியோக்கள் வைரலாகிவருகின்றன. அவை லேட்டஸ்டாகவும் இருக்கின்றன, பழைய வீடியோக்களாகவும் இருக்கின்றன.

ஆனால், வித்தியமான வீடியோக்கள் எப்போதும் வைரலாகின்றன. தற்போது பற்களால் கடி வாங்கிய சுறாவின் வீடியோ (Viral Video) ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகிறது. 

புகைப்படக் கலைஞர் ஜலீல் நஜாபோவ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் காயமடைந்த பெண் சுறாவின் வீடியோவை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தின் பின்னணியைப் பற்றியும் அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார். 

நஜாபோவ் (Najafov) ஒரு சுறா பாதுகாப்பு ஆர்வலர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது உண்மையில் ஒரு கடி குறியா?  என்று சமூக ஊடகங்களில் விவாதங்களும் (Video Viral) எழுந்துள்ளன. புகைப்படத்தை முதன்முறையாகப் பார்க்கும் போது இது மர்மமானதாகவே இருக்கிறது. இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளனர்.

நஜாபோவ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மெக்ஸிகோவில் கடலில் இருந்தபோது, அவர்கள் படகிற்கு அருகில் ஒரு பெரிய வெள்ளை சுறா வந்தது. அதற்கு மிகப்பெரிய காயம் இருந்ததையும் சுறா பாதுகாப்பு ஆர்வலர்கள் பார்த்துள்ளனர்.  

வாழ்நாளில் இதுபோன்ற ஒன்றை பார்த்ததில்லை என்பதால் மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக நஜாபோவ் தனது பதிவில் குறிப்பிட்டுளார். பிரம்மாண்டமான சுறாவின் மார்பில் பெரிய சுறாமீன் கடித்த குறியை பார்த்தோம் என்று நஜாபோவ் கூறினார்.

ALSO READ | சமூக ஊடகங்களில் வைரலாகும் மரண கிணறு சவால் வீடியோ

"நான் பல ஆண்டுகளாக சுறாக்கள் தொடர்பான விஷயங்களில் ஆர்வமாக பணிபுரிந்து வருகிறேன், எனவே இதுதொடர்பாக எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. அரிதான ஒன்றைப் பார்க்கும்போது எனக்கு நிச்சயமாகத் தெரியும், இவ்வளவு பெரிய சுறா வடுவை நான் பார்த்ததில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

நஜாபோவ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இது ஒரு இனச்சேர்க்கை வடு அல்லது ஆக்கிரமிப்பு செயலா என்பதைப் பற்றியும் அவர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக இந்த காயத்திற்கு இரண்டு காரணங்களே இருக்கும். அதிலும் இந்த பெண் சுறாவின் மார்பில் இருந்த காயத்தைப் பார்த்தால், அது இனசேர்க்கையின்போது, ஆண் சுறா கடித்த வடுவாக இருக்கலாம். 

இரண்டாவதாக, சுறாக்களுக்குள் சண்டை வந்தால், இப்படி கடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. காயத்தைப் பார்க்கும்போது, அது மற்றொரு சுறா கடித்ததைக் போலவே தெரிகிறது. ஆனால் இவ்வளவு ஒரு பெரிய சுறாவை மற்றொரு சுறா தாக்கியிருக்கிறது என்றால், இது சற்று தீவிரமான விஷயம். 

எனவே இது சுறாவின் காதலாகவும் இருக்கலாம், இல்லை சுறாக்களின் மோதலாகவும் இருக்கலாம்...

ALSO READ | கள்ளக்காதலியை ஹோட்டலுக்கு அழைத்து சென்ற கணவன்; மனைவி செய்த அதிரடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News