இணைய தேடல் ஜாம்பவான் கூகிள், இன்று கன்னட கவிஞர் "குவெம்பு" அவர்களின் 113-வது பிறந்தநாளினை கொண்டாடுகிறுத!
"குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா" கன்னட கவிஞர், குவெம்பு என்னும் புனைப் பெயர் கொண்டு தனது எழுத்துக்களை உலகிற்கு கொடுத்தவர். கன்னட கவியுலகில் முக்கியமானவர்களில் குறிப்பிடத்தக்வர்.
1904-ஆம் ஆண்டு டிச., 29-ஆம் நாளில் கர்நாடகத்தின் சிக்மங்களூர் மாவட்டம், கொப்பா வட்டம், இரேகோடிகெ பகுதியில் பிறந்தார்.
கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படும் இவர் பேராசியரும் ஆவார். இவரது இலக்கியத்திற்காக இவருக்கு ஞானபீட விருது (1967), பத்ம பூசன்(1958), சாகித்திய அகாதமி விருது(1955), தேசிய கவி(1964), ஆதிகவி பம்பா விருது(1987), பத்ம விபூசண்(1988), கர்நாடக ரத்னா(1992) போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.
நவீன கன்னடத்தில் இராமாயணத்தினை "ஸ்ரீ ராமாயண தர்சனம்" என்னும் பெயரில் எழுதியுள்ளார். மேலும் கருநாட்டக மாநில நாட்டுப்பண்ணான "ஜெய பாரத ஜனனீய தனுஜாதே" பாடல் இவர் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது!
இராஷ்ட்ரகவி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், நவ-11, 1994 ஆம் ஆண்டு இயற்கை ஏய்தினார்!