அம்மாடி, சீட்டுக்கு இப்படி ஒரு சண்டையா? மெட்ரோவில் அடித்துக்கொண்ட பெண்கள், வைரல் வீடியோ

Viral Video: மெட்ரோ ரயிலில் பெண்கள் போட்டுக்கொண்ட சண்டையின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. எதற்கு சண்டை என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 17, 2022, 12:53 PM IST
  • மெட்ரோ ரயிலில் சீட்டுக்கு வந்த சண்டை.
  • அடித்துக்கொள்ளும் பெண்களின் வீடியோ.
  • இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
அம்மாடி, சீட்டுக்கு இப்படி ஒரு சண்டையா? மெட்ரோவில் அடித்துக்கொண்ட பெண்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வித வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இவை நம்மை சிரிக்க வைப்பதோடு பல சமயம் அதிர்ச்சியையும் அளிக்கின்றன. இப்படி கூட நடக்குமா என நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன. ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பல வினோத நிகழ்வுகள் கூட எப்படியோ வீடியோவாக இணையத்தில் பதிவிடப்பட்டு விடுகிறது. இவை நமது அன்றாட வாழ்விலிருந்து நம்மக்கு ஒரு பிரேக் அளித்து நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன.

எனினும், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில வீடியோக்கள் நிஜமாகவே நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றன. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பொதுவாக மெட்ரோ ரயிலில் இருக்கைக்காக சண்டை நடப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். அதே போல் ஒரு சண்டையின் காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு பெண்கள் இருக்கைக்காக சண்டையிடுவதைக் காண முடிகின்றது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்து மற்ற பயணிகளும் நொந்துபோகின்றனர். 

இவர்களது சண்டையை தீர்க்க பிற பயணிகள் சிஆர்பிஎஃப் ஐ கூப்பிட வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஒரு பெண் இருக்கையில் அமர்ந்திருப்பதையும், அவரது பை அடுத்த இருக்கையில் வைக்கப்பட்டுள்ளதையும் வீடியோவில் காண முடிகின்றது. அங்கே மற்றொரு பெண் வந்தவுடன் இருவருக்கும் இடையே சண்டை துவங்குகிறது. 

மேலும் படிக்க | கார்ட்டூனை பார்த்து விளையாடும் பூனைக்குட்டி! இணையத்தை கலக்கும் வீடியோ! 

சீட்டுக்கு வந்த சண்டை 

வைரலாகி வரும் இந்த மெட்ரோ ரயில் வீடியோவில், ஒரு பெண் இருக்கையில் உட்கார்ந்திருப்பதை காண முடிகிறது. அவர் அமர்ந்ததோடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் சீட்டில் தன் பையை வைத்திருப்பதை காண்கிறோம். அடுத்த ஸ்டேஷனில் மற்றொரு பெண் வந்து பை இருக்கும் இடத்தில் தான் அமர வேண்டும் என கூறுகிறார். ஆனால் அமர்ந்திருக்கும் பெண், மற்ற பெண் உட்கார திட்டவட்டமாக மறுத்து, 'இங்கே இடம் கிடையாது. வேறு எங்காவது சென்று அமர்ந்து கொள்ளுங்கள்’ என கூறி விடுகிறார். சிறிது நேரம் கழித்து நின்று கொண்டிருக்கும் பெண், அமர்ந்திருக்கும் பெண்ணிடம், 'இருக்கையை இப்படி பிடித்து வைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. நான் சிஆர்பிஎஃப்-ஐ அழைக்கிறேன்’ என்று கூறுகிறார். 

அடித்துக்கொள்ளும் பெண்களின் வீடியோவை இங்கே காணலாம்: 

இருக்கை ஆக்கிரமிக்கப்பட்டது

நின்று கொண்டிருந்த பெண்ணும், அங்கு அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணும் மீண்டும் மீண்டும் புரிய வைத்தாலும், அமர்ந்திருக்கும் பெண் பையை அகற்றி இடம் தருவதாக இல்லை. பின்னர் நின்றுகொண்டிருக்கும் பெண் மறுபுறம் வந்து, அங்கு இருந்த சிறிய இடத்தில் அமர்ந்துகொள்கிறார். இந்த வீடியோ @Wellutwt என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். ‘இது என்ன இவர் வீடா? இப்படி அடம் பிடிகிறாரே?’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், ‘இப்படிபட்ட நடத்தை கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது’ என கூறியுள்ளார். இடம் இருந்தும், அந்த இடத்தில் தனது பையை வைத்து, நிற்கும் பயணி அமர இடம் கொடுக்காமல் அடம் பிடித்த பெண்ணின் நடவடிக்கை மெட்ரோ ரயிலில் இருந்தவர்களையும், இந்த வீடியோவை காணும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொது சொத்தில் தனி உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை என்பதை இந்த பெண் போன்ற நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | சரக்கடித்த குரங்கு செய்யும் லூட்டி: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News