குஜராத் : மழை வெள்ளத்தில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகள் - அதிர்ச்சி வீடியோ

Viral Video : குஜராத் மழை வெள்ளத்தில் கூட்டம் கூட்டமாக முதலைகள் வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 5, 2024, 08:30 AM IST
  • குஜராத்தில் புகுந்த முதலைகள்
  • வேகமாக பரவும் வீடியோ உண்மையா?
  • போலி செய்தியை தெரிந்து கொள்ளுங்கள்
குஜராத் : மழை வெள்ளத்தில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகள் - அதிர்ச்சி வீடியோ title=

Viral Video :  குஜராத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆறு, குளம், வீதிகள் எல்லாம் வெள்ளக்காடாக மாறியது. வதோதரா நகரத்தை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது முதலைகள் எல்லாம் வீதியில் உலாவத் தொடங்கின. இதுதொடர்பான வீடியோக்கள் எல்லாம் எக்ஸ் பக்கங்களில் வேகமாக பரவியது. இருப்பினும் இதனூடே சில போலி வீடியோக்கள் எல்லாம் பரவத் தொடங்கியது. வதோதராவில் முதலைகள் ஆறுகளில் கூட்டம் கூட்டமாக செல்வதாகவும், அப்போது நீரில் அடித்துச் செல்லப்படும் கால்நடைகளை எல்லாம் முதலைகள்  வேட்டையாடுவதாகவும், வீடியோக்களை பகிர்ந்த நபர்கள் தங்களுடைய பதிவில் தெரிவித்திருந்தனர். இதனைப் பார்த்த மற்ற நெட்டிசன்களும் எக்ஸ் பக்கத்தில் குஜராத்தில் முதலைகளின் நடமாட்டம் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். 

மேலும் படிக்க | ரத்தத்தை உறையவைக்கும் ராஜ நாகம்... பார்த்தாலே பீதியாக்கும் வைரல் வீடியோ

குறிப்பாக பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் குளத்தில் கூட்டமாக செல்லும் முதலைகள் விலங்கு ஒன்றை கவ்விச் செல்வது இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த வீடியோவின் உண்மை தன்மைய ஆராய்ந்ததில் அது குஜராத் வெள்ளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பது தெரிந்தது. வதோதரா மழை வெள்ளத்தில் விலங்கை முதலை வேட்டையாடுவதாக கூறப்பட்டதும் பொய் என கண்டுபிடிக்க முடிந்தது. பெரும்பாலான எக்ஸ் நெட்டிசன்கள் குறிப்பிட்டதுபோல் வதோதராவில் முதலை வேட்டையாடியதாக சொன்ன வீடியோ உண்மையில் தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது.

அங்கு முதலைப் பண்ணையில் அவற்றுக்கு உணவளிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவை திரித்து குஜராத் வதோதரா வெள்ளத்தில் எடுக்கப்பட்டது போன்று பரப்பிவிட்டனர். வனவிலங்கு புகைப்படக் கலைஞர் டோனி இம்பர்லாங் என்பவர் தென்னாப்பிரிக்காவில் உப்புநீர் முதலைகளுக்கு உணவளிக்கும் வீடியோவை எடுத்திருக்கிறார். அவரின் இந்த வீடியோவை எடுத்து வெட்டி ஒட்டி ஒரு போலி செய்தியாக இங்கு பரப்பிவிட்டனர்.  இதுதவிர இன்னும் சில வீடியோக்களும் குஜராத் வெள்ளத்தை மையப்படுத்தி சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டது. அவையெல்லாம் உண்மைக்கு மாறான வீடியோக்கள் என்பதை அந்த வீடியோக்களின் உண்மை தன்மையை ஆராயும்போது தெரியவருகிறது. 

குஜராத் மாநிலம் வதோதராவில் முதலைகள் வேட்டையாடுவதாக திரித்து பகிரப்பட்ட வீடியோ :

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by C.R.O.C. (@croc.qld)

 

மேலும் படிக்க | எமனாக படுத்திருந்த ராஜ நாகம்...! திகிலை கிளப்பும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News