மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல்

Thunderstorm Trust Of Deer: இந்த வீடியோவைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஜப்பானியர்களின் மீதான மரியாதையும் மதிப்பும் கூடும். இந்த மதிப்பிற்கு காரணம், அவர்கள் மீதான மான்களின் நம்பிக்கை என்பது ஆச்சரியமான விஷயம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 29, 2023, 05:34 PM IST
  • மனிதர்களின் மீது விலங்குகளுக்கு இருக்கும் நம்பிக்கை
  • ஜப்பானியர்களின் மீதான நம்பிக்கை
  • மனதை நெகிழச் செய்யும் மான் வீடியோ
மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இந்த உலகில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. உலகமே ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத விஷயங்கள் உலகில் நடைபெறுவதை பார்க்கும் போது, சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சியும், சில சமயம் ஆச்சரியமும் ஏற்படுகிறது. அதேபோல, சமூக ஊடகங்களில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.

இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் நெகிழச் செய்கின்றன, ஆச்சரியம், அதிர்ச்சி, சோகம், அயர்ச்சி என பல்வேறு உணர்வுகளையும் நம்முள் ஏற்படுத்தும் வீடியோக்களை இணையத்தில் பார்த்து மகிழ்கிறோம்.

அதிலும், விலங்குகளின் வீடியோகளுக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படிப்பட்ட சுவாரசியமான வீடியோக்களில் அண்மையில் வைரலாகும் வீடியோவில், விலங்குகள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நெகிழச் செய்கிறது.  

சமூக ஊடகங்களில் வீடியோவின் தாக்கம்

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் பலராலும் ரசித்து பார்க்கப்பட்டாலும், அதில் வித்தியாசமான வீடியோக்கள் அதிகம் விரும்பப்படுவதுடன், பகிரப்பட்டு அதிக அளவில் வைரலாகின்றன. அதிலும் ஆபத்து கால வீடியோக்கள், வைரல் வீடியோ என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.

மேலும் படிக்க | பாம்பை வெச்சி செஞ்சி பதம் பார்த்த தம்மாதுண்டு எறும்புகள்.. வீடியோ வைரல்

அதில், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது டிவிட்டரில் பதிவிடும் வீடியோக்கள், அனைவரும் கவரும் வகையில் இருக்கின்றன. அவை, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகின்றன.

மான்களின் வேகம் அனைவராலும் மிகவும் விரும்பப்படுபவை. அழகான விலங்கு மான், இதை செல்லப்பிராணியாக வளபப்ர்து அரிது என்றாலும், சிலர் வீடுகளில் வளர்க்கின்றனர். சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், காட்டில் அல்ல, நாட்டிற்கும் மான்களின் கூட்டம் ஒன்று இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஜப்பானியர்களின் மீதான மரியாதையும் மதிப்பும் கூடும். இந்த மதிப்பிற்கு காரணம், அவர்கள் மீதான மான்களின் நம்பிக்கை என்பது ஆச்சரியமான விஷயம்.

இணையத்தில் வைரல் ஆனது 

இணையவாசிகள் இதற்கு பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘உண்மையான அன்பு என்ன என்று கேட்பவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்’ என ஒரு பயனர் கூறியுள்ளார். நெகிழ வைக்கும் மான் வீடியோவை பார்த்து மகிழுங்கள்.  

மழைக்கு ஒதுங்கிய மான்கூட்டம்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான இந்த வீடியோவில் மழை பெய்துக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. கேமரா அப்படியே நகரும்போது, மழைக்கு ஒதுங்கி நிற்கும் மான்கூட்டமும், மனிதர்களும் தெரிகின்றனர். 

அதில், அமைதியாக ஆசுவாசமாக இருக்கும் மான்களை அங்கு இருப்பவர்கள் கொஞ்சுவது ஆச்சரியம் அளிக்கிறது. வீடியோவைப் பார்த்தாலே, ஒரு நகரத்தில் மான்கள், இயல்பாக சுற்றித் திரியும் என்பதை ஊகிக்க முடிகிறது.

ஆச்சரியமான தரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, தன இந்த வீடியோவை பாதுகாத்து வைக்க விரும்புவதாக சொல்வதன் அடிப்படை தெள்ளத்தெளிவாக புரிகிறது.

இந்த வீடியோவை பார்ப்பவர்களால், மான்களின் பயமற்ற தன்மையையும், அவை அமர்ந்திருக்கும் சாவகாசமான நிலையையும் பார்க்கும்போது, அவை மனிதர்களை நம்புவதை பார்க்க முடிகிறது.  

மேலும் படிக்க | வாரி அணைத்து முத்தம் கொடுத்த சிங்கங்கள், பாச மழையில் நனைந்த நபர்: நம்பவே முடியாத வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News