தன் குட்டிகளுக்கு சாப்பாடு வைத்ததற்காக தாய்க்கு நன்றி சொன்ன நாய்!

தனது நாய்க்குட்டிகளுக்கு உணவளித்ததற்காக பெண் ஒருவருக்கு தாய் நாய் ஒன்று நன்றி கூறும் விதமாக செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 10, 2022, 01:57 PM IST
  • பெண்ணிற்கு நன்றி கூறிய நாய்.
  • நாய்குட்டிகளுக்கு உணவு வைத்த பெண்.
  • இணையத்தில் வீடியோ வைரல்.
தன் குட்டிகளுக்கு சாப்பாடு வைத்ததற்காக தாய்க்கு நன்றி சொன்ன நாய்! title=

நாய்க்குட்டிகள் பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது, வீடுகளில் நாய்களை பிள்ளை போல வளர்த்து வருகின்றனர்.  அதே சமயம் தெருக்களில் இருக்கும் நாய்களை யாரும் கண்டுகொள்வதில்லை, அவைகள் உணவிற்கு தடுமாறுகின்றன.  ஒரு பெண் தாயுணர்வோடு பசியில் தவித்து கொண்டிருக்கும் நாய்க்குட்டிக்கு உணவளித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களையும் கவர்ந்து வருகிறது.  இதேபோல ஏற்கனவே முதியவர் ஒருவர் சைக்கிளில் உணவினை சுமந்து வந்து தெருக்களில் வசிக்கும் நாய்களுக்கு உணவளித்த வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | முட்டையை எடுத்த நபர், அட்டாக் செய்த மயில்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

ட்விட்டர் பக்கத்தில் யோகி என்கிற கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவுடன் "தாய் நாயானது தனது குட்டிகளுக்கு உணவளித்த பெண்ணுக்கு நன்றி கூறுகிறது" என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் பெண் ஒருவர் தரையில் படுத்துக்கொண்டிருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.  ஒரு பையில் உணவை வைத்துக்கொண்டு அந்த நாய்க்குட்டிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணவை அள்ளி போடுகிறார்.  அப்போது அவர் அருகில் நின்ற அந்த நாய்க்குட்டிகள் தாயானது அப்பெண்ணின் பின்னல் சுற்றிக்கொண்டே அவர் உணவு பரிமாறும்போது நன்றி கூறும் விதமாக அப்பெண்ணின் கைகளை பற்றிக்கொண்டு, முகத்தை அவர் கைகளில் பதிக்கிறது.

 

இந்த வீடியோ காண்போரின் இதயங்களை நெகிழ செய்துள்ளது.  மார்ச்-8ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.  ஒரு பயனர் இந்த பெண்ணை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று கமெண்ட் செய்துள்ளார், மற்றொருவர் இது மனதை வருகிறது என்று கூறியுள்ளார்.  இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவிற்கு ஹார்ட் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | குழந்தைக்கு பெட்சீட் போர்த்திவிடும் நாய்! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News