சிறுமியுடன் கண்ணாமூச்சி விளையாடும் நாய்: வைரல் வீடியோ

நாய் ஒன்று சிறுமியுடன் கண்ணாமூச்சி விளையாடும் வீடியோ காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 25, 2023, 02:29 PM IST
  • கண்ணாமூச்சி விளையாடும் நாய்
  • சிறுமியுடன் ஜாலியாக விளையாடுகிறது
  • இணையத்தில் வைரலான வீடியோ
சிறுமியுடன் கண்ணாமூச்சி விளையாடும் நாய்: வைரல் வீடியோ title=

சிறுமி ஒருவர் செல்ல நாய்க்குட்டியுடன் கண்ணாமூச்சி விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு உலகம் முழுவதும் இருக்கும் குழந்தைகள் செல்போனில் மூழ்கி, வெளிப்புற விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாடுகள் இருக்கின்றன. இது ஆபத்தான போக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், குழந்தைகளை விளையாட அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இது அவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளனர். இணையங்களிலும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு தொடர்பான வீடியோக்கள் அதிகம் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. 

மேலும் படிக்க | இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ

அந்த வகையில் சிறுமி ஒருவர் தன் வீட்டில் இருக்கும் செல்ல நாயுடன் கண்ணாமூச்சி விளையாடும் வீடியோ காண்போரை ரசிக்க வைத்துள்ளது.  இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ ஒன்றை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அந்த சிறுமி நாயிடம் நாம் தற்போது ஹைடு அண்டு சீக் (கண்ணாமூச்சி) விளையாட உள்ளோம் என்று கூறுகிறார். அதை கேட்டவுடன் நாய் சுவற்றின் பக்கம் திரும்பி எண்ண தொடங்கிறது. சிறிது நேரத்திற்கு பிறகு இந்தச் சிறுமியை தேட செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 

யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. வீடியோவை தற்போது வரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஒருவர், "நாய்கள்தான் இந்த விளையாட்டில் நிச்சயம் வெற்றி பெறும். ஏனென்றால் நாய்கள் தன்னுடைய மோப்ப சக்தியை வைத்து எளிதாக கண்டுபிடிக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.  மேலும் பலர் இது எவ்வளவு க்யூட்டாக உள்ளது என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

ஊரடங்கு காலத்தில் பலரும் தங்களுடைய செல்ல பிராணிகளுடம் நேரத்தை செலவிடும் வகையில் பல வீடியோக்கள் வந்துள்ளன. அந்த வகையில் இதுவும் சிறப்பான வீடியோவாக அமைந்துள்ளது. கடந்த மாதம் ஒருவர் தன்னுடைய நாய்க்கு பெயிண்டிங் வரைய சொல்லி கொடுத்த வீடியோ மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க | சரக்கடித்து மட்டையான குரங்கு... விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: ஷாக்கிங் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News