வம்பிழுத்தவரை வகுந்தெடுத்த நாய் - வைரல் வீடியோ

வீதியில் சென்றபோது வம்பிழுத்தவரை நாய் வகுந்தெடுத்த வீடியோ வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 9, 2022, 06:16 PM IST
  • வம்பிழுத்தவரை வகுந்தெடுத்த நாய்
  • நாயின் கடிவாங்கி தப்பித்த நபர்
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
வம்பிழுத்தவரை வகுந்தெடுத்த நாய் - வைரல் வீடியோ  title=

பொதுவாக நாய்களிடம் சேட்டை செய்யக்கூடாது. சாதுவாக இருக்கிறதே என உங்களின் புஜபலத்தை நீங்கள் காட்டினால், விபரீத்தத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பில்லை. தொடும் இடங்களில் எல்லாம் காயமாகத் தான் இருக்கும். இந்த விஷயத்தை வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சொல்லிக் கொடுப்பார்கள். வெளியில் செல்லும்போது, தெருநாய்கள் வரும்போது அமைதியாக வர வேண்டும், நாய்கள் இருந்தால் அதனுடன் வம்பிழுக்ககூடாது என அறிவுறுத்துவார்கள். ஒருவேளை நாய்கள் குறைத்துக் கொண்டு வேகமாக ஓடி வந்தால்கூட, எதுவும் ரியாக்ட் செய்யாமல் நான் சென்று கொண்டே இருந்தால் அது ஓடிவிடும்.

மேலும் படிக்க | பயமா எனக்கா? உற்சாகமாக நீச்சல் அடித்த பூனை!

பயமுறுத்துகிறேன், விளையாடுகிறேன் என கம்பு சுற்றினால் கடி வாங்குவதில் இருந்து கடவுள் கூட காப்பாற்ற முடியாது. மேலும், வீட்டில் நாய்களாக இருந்தாலும் அதே நிலை தான். இங்கே ஒருவர் நாய் ஒன்று அமையாக இருக்கிறது என வம்பிழுக்கிறார். அமைதியாக இருக்கும் நாய், ஒருகட்டத்துக்கும் மேல் பொறுமையை இழந்துவிடுகிறது. மேலும், வம்பிழுத்தவரை தாறுமாறாக நொடிப் பொழுதில் கடித்து பிராண்டி விடுகிறது. வீடியோவை பார்ப்பவர்களுக்குக் கூட அந்த நாய் மீது வெறுப்பு வரவில்லை. 

அந்த வீடியோவில் நண்பர் ஒருவர் நாயுடன் வாக்கிங் வந்திருக்கிறார். இன்னொருவர் நாயுடன் வந்தவருடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். கையில் செடியின் கிளை ஒன்றை வைத்திருக்கும் அவர், அதனைக் கொண்டு நாயை சீண்டிக் கொண்டே இருக்கிறார். நாய் அமைதியாக இருக்கிறது.  இதன்பிறகு அந்த கிளை மூலம் ஓங்கி வேகமாக அடிக்கிறார். அவ்வளவு தான். அடுத்த நொடி நாய்க்கு கோபம் பீறிட்டிக் கொண்டு வந்து, அடித்த நபரை தாறுமாறாக பிராண்டி விடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், தன் வினை தன்னைச் சுடும் என்றும், கர்மா திருப்பிக் கொடுக்கிறது என்றும் கமெண்ட் அடித்துள்ளனர். 

மேலும் படிக்க | இது பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை: வைரலாகும் ஆதிக்கப் போர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News