ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அதுவும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் ஆடுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தோனி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க உரையாற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது என்னவென்றால்,
இதற்கு முன்பு நடந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. மேலும் கண்ணீரை அடக்கிக் கொண்டு பேசிய அவர் நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்.. இனி என்ன செய்யப் போகிறோம் என்பதே முக்கியம். மீண்டும் அதே சென்னை அணியை கட்டமைத்துக் கொடுத்த நிர்வாகிகளுக்கு நன்றி என்று கூறினார்.
Captain Cool melts down for the first time after receiving overwhelming response from fans for the return of #CSK #MSDhoni #Dhoni #DhoniEmotional #CSK2_0 #CSKReturns #WhistlePodu #VIVOIPL #IPL #IPL2018 pic.twitter.com/2fFfTy9b3C
— Chennai Super Kings 2.0 (@CSK2_0) March 29, 2018