டென்மார்க் உயிரியல் பூங்காவில் ஒரு குழந்தை பென்குயினை, இரண்டு பெண்குயின் தம்பதியினர் திருடிய நசம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
டென்மார்க்கின் பிரபல உயிரியல் பூங்காவான ஒண்டென்ஸ் உயிரியல் பூங்காவில் நிகழ்ந்த இச்சம்பவத்தினை குறித்து பூங்கா நிர்வாகத்தினர் தங்களது முகப்புத்தகத்தில் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பூங்கா மேற்பார்வையாளர் சாண்டி ஹெடகார்ட் முங்கின் தெரிவிக்கையில்... ஒண்டென்ஸ் மிருகக்காட்சிசாலையில் ஒரு பென்குயின் ஜோடியானது பெற்றோர் ஆக வேண்டும் என விரும்பியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட இரண்டு பெண்குயின்களும் ஆண் ஓரினச்சேர்க்கை பென்குயின்கள். எனவே தங்களால் இயற்கையான முறையில் பெற்றோர் ஆக முடியாது என்பதால், மற்றொரு தம்பதியின் குழந்தையினை திருடியுள்ளனர். என தெரிவித்துள்ளார்.
மேலும் கடத்தப்பட்ட பெண்குயினானது தனது பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தனித்து விடப்பட்ட குழந்தை பெண் குயினையே இந்த ஓரினச்சேர்க்கை பெண்குயின்கள் திருட முற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.