'நீ டியூன போடு, என் ஆட்டத்த பாரு': கிளியின் மாஸ் ஆட்டம், வாய் பிளக்கும் நெட்டிசன்கள்

Parrot Viral Video: பேசும் கிளியை பார்த்திருப்பீர்கள். கியூட்டாக ஆடும் கிளியை பார்த்துண்டா? தூளாக டான்ஸ் ஆடும் கிளியின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 7, 2022, 02:54 PM IST
  • மொபைல் டியூனுக்கு கிளியின் மாஸ் டான்ஸ்.
  • ஆச்சரியத்தில் அசந்துபோகும் நெட்டிசன்கள்.
  • வைரலான வீடியோ.
 'நீ டியூன போடு, என் ஆட்டத்த பாரு': கிளியின் மாஸ் ஆட்டம், வாய் பிளக்கும் நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். நாம் நமது தினசரி வாழ்வில் பொதுவாக பார்க்க முடியாத பல அரிய நிகழ்வுகளை இணையத்தில் கண்டு மகிழ்கிறோம். இவற்றின் மூலம் நமது மன அழுத்தமும் இறுக்கமும் கூட குறைகின்றன. குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மக்களால் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. இவற்றுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் செய்யும் சில கியூட் செயல்களை பலர் அவ்வப்போது இணையத்தில் பகிர்கிறார்கள். இவை இணையவாசிகளின் உள்ளத்தை கொள்ளைக் கொள்கின்றன.

அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.  செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் கிளியின் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்டது. இந்த வீடியோ வெளிவந்தது முதல், இந்த கிளி ஒரு டான்சிங் சென்சேஷனாக, சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளது. இணையவாசிகள் இந்த கிளியை மிகவும் விரும்பி பாராட்டி வருகிறார்கள். 

தூளாக டான்ஸ் செய்யும் கிளி 

மனிதர்கள் பேசுவதை அப்படியே பேசும் கிளியின் திறமை எப்போதும் மக்களை மிகவும் கவர்வதுண்டு. கிளி பேசும், அது அனைவருக்கும் தெரியும். ஆனால், கிளி இவ்வளவு அழகாக நடனமாடும் என்பது இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ள முடிகின்றது. அதுவும் ஒருவர் மொபைல் போனில் உள்ள ரிங் டோன்களை ஒவ்வொன்றாக போட, அந்த கிளி அந்த மெட்டுக்கு ஏற்றாற்போல மிகவும் கியூட்டாக நடனமாடுகிறது. இது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. 

மேலும் படிக்க | துள்ளி விளையாட மட்டுமல்ல; குத்து சண்டையும் தெரியும்... மான்களின் அசத்தல் வீடியோ! 

கிளிகள் நம் நாட்டில் பல இடங்களில் காணப்படும் பறவைகள். அவை சிட்டாசின்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பச்சை நிற கிளிகள் பொதுவாக நம் நாட்டில் அதிகம் காணப்படுகின்றன. நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்களில் கிளிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. கிளிகள் பொதுவாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன. கிளிகள் பொதுவாக விதைகள், கொட்டைகள், பழங்கள், பூ மொட்டுகள் மற்றும் தாவரங்களின் பாகங்களை உண்ணும். மனிதர்களின் பேச்சைப் பின்பற்றும் திறனே மக்கள் கிளிகளை அதிகம் விரும்புவதற்குக் காரணம். 

இந்த வீடியோவை Fgn என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. போனில் வரும் மெட்டுக்கு ஏற்ப ஆடும் கிளி, ட்யூனின் வேகம் அதிகமாகும் போதும், குறையும் போதும், அதற்கு ஏற்ப தனது உடல் அசைவுகளையும் மாற்றி அற்புதமாக நடனமாடுகிறது.

இந்த வீடியோவுக்கு 41000க்கும் மேற்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் வந்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர். ‘இந்த கிளி என் டான்ஸ் பார்ட்னராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என ஒருவர் கூறியுள்ளார். ‘சூப்பர் டான்ஸ்’ என ஒரு பயனர் பாராட்டியுள்ளார். 

மேலும் படிக்க | அடேங்கப்பா! பெண்ணின் கையிலிருந்த க்ரீமை நக்கும் அபாய விலங்கு: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News