உலகில் பல அதிசய உயிரினங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஏராளமானவை இன்னும் மனிதர்களின் கண்களுக்கு தென்படாமலேயே இருக்கின்றன. எப்போதாவது யாரேனும் ஒருவர் முன்பு அவை தென்படும். அப்படி மனிதர்களைப் போலவே பற்களைக் கொண்டிருக்கும் நண்டு இருப்பதை இப்போது கண்டுபிடித்துள்ளனர். அந்த வீடியோவும் யூடியூப் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | எப்புட்றா... பெரிய முட்டையை அசால்டாக விழுங்கும் பாம்பு... வைரல் வீடியோ!
@BacktoBasics என்ற யூடியூப் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் தென்பட்ட ஒரு நண்டு ஒன்றின் வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார். அது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது மட்டுலின்றி, பலர் குழம்பியும் போயுள்ளனர். "மனிதப் பற்களை கொண்டு நண்டு" சமூக ஊடகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதேபோல், மேற்கு ரஷ்யாவில் மீன்பிடி இழுவை படகில் பணிபுரியும் புகைப்படக்கலைஞரான ரோமன் ஃபெடோர்ட்சோவ் (Roman Fedortsov), தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சில அசாதாரண ஆழ்கடல் கண்டுபிடிப்புகளின் படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் இதேபோல் பற்களுடன் இருக்கும் நண்டின் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதனைப் பார்த்த அவரது 652,000 ஃபாலோயர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே மிகவும் வைரல் செய்தியாகியது. இன்ஸ்டாகிராம் பதிவில், ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ள தலைப்பில் "நண்டுகள்... இருப்பினும், அவற்றில் ஏதோ வித்தியாசமான அல்லது பயமுறுத்தும் வகையிலான விஷயம். இயற்கையில் அதிசயத்தை மர்மத்தை புரிந்து கொள்ள முடியவில்லை" என பதிவிடப்பட்டுள்ளது. சமூக ஊடகத்தில் இந்த படம் பகிரப்பட்ட உடனேயே இதற்கு நிறைய லைக்குகளும் கருத்துகளும் குவிந்தன.
பெடோர்சோவ் கடல் அசுரன் புகைப்படங்களின் விசித்திரமான பட தொகுப்பை வைத்துள்ளார் எனலாம். அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளில், வித்தியாசமாக தோற்றம் அளிக்கும், சிலந்தியை போல் தோற்றமளிக்கும் மீன், மண்புழுவை போல தோற்றம் அளிக்கும் மீன் மற்றும் குமிழியை போல் தோற்றமளிக்கும் உயிரினம் ஆகியவற்றின் புகைப்படங்கள் அடங்கும். மற்ற படங்களில், நீர்வாழ் உயிரினங்கள் இயற்கையாக நீந்துவதைக் காணலாம். ஜூன் மாதம் அமெரிக்கக் கடற்கரையில் கரை ஒதுங்கிய விசித்திரமான தோற்றமுடைய இறந்த கடல் உயிரினம் குறித்த இவரது படமும் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகின.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ