கல்யாணத்துக்கு பஸ் புக் பண்ணு பாத்திருப்பீங்க ஆனா....Flight-ட்டு...வீடியோ வைரல்

தனது சகோதரியின் திருமணத்திற்குச் செல்ல ஒரு முழு விமானமும் முன்பதிவு செய்திருக்கிறார். சிலர் உறவினர்களைப் பற்றி கேலி செய்தாலும், மற்றவர்கள் குடும்பம் செலவழித்த பணத்தைப் பற்றி பேசினர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 4, 2022, 03:29 PM IST
  • விசித்திரமான முறையில் திருமணம்.
  • விமர்சிக்கும் நெட்டிசன்கள்.
  • வைரலாகும் வீடியோ.
கல்யாணத்துக்கு பஸ் புக் பண்ணு பாத்திருப்பீங்க ஆனா....Flight-ட்டு...வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அதன்படி இப்போதும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. 

மேலும் படிக்க | கூப்பிட்ட பெண், ஓடோடி வந்த எருமை: இதயங்களை இளக வைக்கும் வைரல் வீடியோ 

டிஜிட்டல் உருவாக்கியவர் ஸ்ரேயா ஷா ராஜஸ்தானில் உள்ள தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவரது மொத்த குடும்பத்தினருடன் விமான மூலம் பயணித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை இங்கே காணுங்கக்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 10.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.  இதற்கு நெட்டிசன்களும் பலவித கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த குரங்கு: இணையத்தை இளக வைத்த வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News