20 ஓவர் போட்டியில் ஷாக் கொடுத்த நாகப்பாம்பு - தெறித்து ஓடிய இலங்கை வீரர்: வைரல் வீடியோ

இலங்கை ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திடீரென மைதானத்திற்குள் புகுந்த நாகப் பாம்பு, இசுரு உதானாவுக்கு மிக அருகிலேயே சென்றதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 13, 2023, 05:20 PM IST
  • கிரிக்கெட் மைதானத்தில் பாம்பு
  • திடீரென பார்த்து ஷாக்கான உதானா
  • இணையத்தில் வைரலான வீடியோ
20 ஓவர் போட்டியில் ஷாக் கொடுத்த நாகப்பாம்பு - தெறித்து ஓடிய இலங்கை வீரர்: வைரல் வீடியோ title=

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2023-ன் 15வது போட்டியின் போது இலங்கையின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதானா, கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் பாம்பிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். சனிக்கிழமை நடைபெற்ற யாழ் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் B-Love கண்டி அணி பந்துவீசிக் கொண்டிருந்தது. அந்த அணி 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

மேலும் படிக்க | இணையத்தில் தீ பற்ற வைத்த ஆட்டம்: அந்த எக்ஸ்பிரஷன்... சான்சே இல்ல.. வைரல் வீடியோ

அப்போது லாக் ஆன் திசையில் பி லவ் கண்டி அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதானா பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மைதானதிற்குள் நாகப்பாம்பு புகுந்தது. அவர் அதனை கவனிக்கவில்லை. பீல்டிங்கிற்காக சற்று நகர்ந்து நிற்கலாம் என டக் என திரும்பிப் பார்த்தபோது பெரிய நாகப் பாம்பு செல்வதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தார். பாம்புக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதை நினைத்து உறைந்தே போய்விட்டார். சில நொடிகளுக்குப் பிறகு சுதாரித்துக் கொண்ட இசுரு உதானா மீண்டும் பாம்பு செல்வதை பார்த்து, முகத்தை கை கொண்டு சில நொடிகள் மறைத்துக் கொண்டார்.

அதாவது திடீரென ஏற்பட்ட பயம் அவருக்குள் படபடப்பை உருவாக்கியது. ஏனென்றால் வீடியோவில் பார்த்தால் உங்களுக்கு தெரியும், பாம்பு அவருக்கு எவ்வளவு மிக அருகில் செல்கிறதென. இந்த வீடியோவை இலங்கையின் ஊடகவியலாளர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த தொடரில் இதற்கு முன்பு Galle Titans மற்றும் Dambulla Aura அணிகளுக்கிடையிலான போட்டியின்போதும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போதும் நாகப்பாம்பு தான் மைதானத்திற்குள் புகுந்தது. இதனால், சுமார் 20 நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டது.  இதேபோல், இந்தியாவிலும் பாம்பு ஒன்று மைதானத்திற்குள் புகுந்து அதனால் போட்டி நிறுத்தப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப் பயணம் செய்திருந்தபோது, இரு அணிகளும் கவுகாத்தியில் 2வது 20 ஓவர் போட்டியில் விளையாடின. அப்போது தென்னாப்பிரிக்க அணி ரன் சேஸிங் செய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் பாம்பு ஒன்று மைதானத்திற்குள் புகுந்தது. இதனைப் பார்த்து ரசிகர்களும், வீரர்களும் ஷாக்கானார்கள்.

மேலும் படிக்க | சின்னஞ்சிறிய பறவைகளின் ரொமான்ஸ்... இணையவாசிகளை கிறங்க வைத்த காதல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News