Watch Video: Photo எடுத்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சிம்பன்சி அதன் பிறகு செய்தது என்ன? பாருங்கள்...

சிம்பன்சியின் முத்தமும் பெண்ணின் சிரிப்பும் இந்த வீடியோவை வைரலாக்கி விட்டன. பல பயனர்கள் இந்த வீடியோவிற்கு வேடிக்கையான பல கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2021, 08:14 PM IST
  • தன்னுடன் புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சிம்பன்சி.
  • சிம்பன்சியின் முத்தம், பெண்ணின் சிரிப்பு, வைரலனாது வீடியோ.
  • வியூஸ்களையும் லைக்குகளையும் அள்ளுகிறது இந்த வைரல் வீடியோ.
Watch Video: Photo எடுத்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சிம்பன்சி அதன் பிறகு செய்தது என்ன? பாருங்கள்... title=

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் வரும் பல வீடியோக்கள் நம்மை நம் கஷ்டங்களை மறந்து சிரிக்க வைக்கின்றன.  அப்படிப்பட்ட வீடியோக்களை பார்த்து, சிறிது நேரத்திற்கே ஆனாலும், நாம் நமது வருத்தங்களை மறந்து விடுகிறோம். 

அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பழையது என்றாலும், அது இன்னும் பலரால் தினமும் பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்திய குடும்பங்கள், வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது, அங்குள்ள பிரபலமான இடங்களில் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றன. கணவன் மனைவி மகன் என சுற்றுலா சென்ற ஒரு குடும்பமும், பல இடங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. 

சிம்பன்சியுடன் புகைப்படம் எடுக்க, கணவன் மனைவி மகன் என அனைவரும் அதனுடன் அமர்ந்தனர். முதலில் சாதாரணமாக புகைப்படம் கிளிக் ஆனது. பின்னர்தான் எதிர்பாராதது நடந்தது.

படு குஷியாக இருந்த சிம்பன்சி

சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த கணவன் தன் மனைவி மற்றும் மகனை அங்கே விட்டு வேறு எங்கோ சென்றார். மனைவி தனியாக சிம்பன்சியுடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். சிம்பன்சிகள் பொதுவாக மிகவும் வேடிக்கையான மனோபாவத்தைக் கொண்ட விலங்குகள் ஆகும். அதற்கான சான்று இந்த வீடியோவிலும் கிடைத்தது. முதலில் சிம்பன்சி அந்த பெண்ணின் தோளில் கை போட்டது. பின்னர் யாரும் எதிர்பாராத வண்ணம் அவரை முத்தமிடத் தொடங்கியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் (Social Media) வெகுவாக வைரல் ஆகி வருகிறது.

வீடியோவுக்கு லட்சக்கணக்கான வியூஸ்
இந்த வீடியோ ஒரு லட்சம் 57 ஆயிரம் லைக்குகளை அள்ளியுள்ளது. பல லட்சக்கணக்கானோர் இதை பல முறை பார்த்து விட்டார்கள். சிம்பன்சி அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றபோது அவர் சிரிக்கத் தொடங்கினார். சிம்பன்சியின் முத்தமும் பெண்ணின் சிரிப்பும் இந்த வீடியோவை வைரலாக்கி (Viral Video) விட்டன. பல பயனர்கள் இந்த வீடியோவிற்கு வேடிக்கையான பல கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர். 

ALSO READ: IPL 2021: தல தோனியின் 114 மீட்டர் சிக்சர், வைரலாகும் வீடியோ!

ALSO READ: Daddy Virat duties: ODI போட்டிகளுக்காக புனேவுக்கு செல்லும் விராட் குடும்பம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News