Lion Video: என்று தணியும் இந்த தீ? எரியும் காட்டில் சோக நடை போடும் சிங்கம்

Lion Viral Video: நெருப்பில் வெந்து கருகும் காட்டைப் பார்த்து கவலையில் சோக நடை பயிலும் இது போன்ற வீடியோவை இதுவரை பார்த்திருக்கவே முடியாது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 1, 2022, 11:49 AM IST
  • வெந்து கருகும் காடு!
  • கவலையில் மூழ்கிய சிங்கம்!
  • தளர் நடை போடும் சிங்கம் வைரல் வீடியோ
Lion Video: என்று தணியும் இந்த தீ? எரியும் காட்டில் சோக நடை போடும் சிங்கம் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. கைக்குள் மொபைலில் அடங்கிவிட்ட இணையம், நம்முடன் இணைந்தே பயணிக்கிறது. ஒருகாலத்தில் தனி உலகமாக கருதப்பட்ட இணையமும் தொழில்நுட்பமும் இன்று நம் கைக்குள் அடங்கிவிட்டன. சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளத்தில் பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு முக்கியமான செய்திகளை வழங்குகின்றன. ஆனால் பயனுள்ள தகவல்களும் செய்திகளும் மட்டுமல்ல, பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய செய்திகளும் இணையத்தை ஆக்ரமித்துள்ளன.

இருந்தாலும், விளையாட்டு, வேடிக்கை, கேளிக்கை என பொழுதுபோக்குக்கும் தரமான ஊடகமாக மாறிவிட்டது இணையதளம் என்று சொல்வது மிகையானதாக இருக்காது. நமது அன்றாட வாழ்வில் வழக்கமாக இருக்கும் விஷயங்களில் இருந்து சற்று மாற்றி சிந்திக்கவும், சிரிக்கவும், கவலைப்படவும் இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.

மேலும் படிக்க | சூப்பராக பாத்திரம் தேய்க்கும் குரங்கு: கொஞ்சித் தீர்க்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகம் எப்படி இருக்கிறது என்பதை சமூக ஊடகங்கள் மூலமே நாம் தெரிந்துக் கொள்வது அதிகமாகிவிட்டது.

விலங்குகளுக்குள்ளும் பல சுவாரசியங்கள் உள்ளன. சிங்கங்கள் இரை தேடுவதில் மிக மும்முரமாக இருக்கும், அதன்படி தற்போது ஒரு சிங்கத்தின் வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் இந்த வீடியோவில், சிங்கம் சோக நடை பயில்கிறது.

நெருப்பில் வெந்து கருகும் காட்டைப் பார்த்து கவலையில் சோக நடை பயிலும் இது போன்ற வீடியோவை இதுவரை பார்த்திருக்கவே முடியாது. காட்டு விலங்குகளின் வாழ்வாதாரத்தை எரித்த காட்டுத்தீ இது.

தனது வாழ்வாதரத்தை, இருப்பிடத்தையும் சூழ்ந்த தீ, அந்த சிங்கத்தின் சீற்றத்தையும், வலிமையையும் தகர்த்துவிட்டதா? அதன் தளர்வான நடை பார்ப்பவர்களின் மனதை நெகிழ்ச்சியாக்குகிறது.

சிங்கம் வேட்டைக்கு போய் பார்த்திருக்கலாம், விலங்குகளை தாக்கி உணவாக மாற்றியிருப்பதை பார்த்திருக்கலாம். ஆனால், காட்டுக்கே ராஜாவாக இருந்தாலும், இயற்கையின் முன் நாம் ஒன்றும் இல்லை என்பதை பார்த்து திகைத்து நிற்கும் சிங்கம் தளர் நடை போடுவதைப் பார்ப்பது அரிது. 

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News