வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமணம் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
திருமணங்களின் இலட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம்.
சமீபத்திலும் ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது பலரால் பகிரப்பட்டு வேகமாக வைரல் ஆகி வருகின்றாது. இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயமாக நம்மால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீடியோவில் மணமகனும் மணமகளும் மாலை மாற்றும் சடங்கிற்காக தயாராக இருப்பதை காண முடிகின்றது. மணமகள் மணமகனுக்கு மாலை அணிவிக்க வரும்போது மணமகன் ஒரு நிபந்தனை வைக்கிறார். அதை கேட்டவுடனேயே மணமகள் வெட்கத்தில் சிவந்து விடுகிறார்.
மணமகன் தனக்கு முத்தம் கொடுத்தால்தான் மாலை அணிவிக்க முடியும் என நிபந்தனை வைக்கிறார். இதை கேட்ட மணமகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருமணத்திற்கு வந்துள்ள அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். இறுதியாக வேறு வழியின்றி மணமகள் மணமகனின் கன்னத்தில் முத்தமிடுகிறார். அதன் பிறகு மணமகள் வசதியாக மாலை அணிவிக்க, மணமகன் கீழே ஒரு கால் முட்டி போட்டு அமர்கிறார். மணமகள் மீது மணமகன் கொண்டுள்ள காதலை இந்த வீடியோ அழகாக எடுத்துக்காட்டுகிறது.
அழகான திருமண வீடியோவை இங்கே காணலாம்
जबतक दूल्हे का डिमांड पूरा नही हुआ तबतक दूल्हे ने दुल्हन को वरमाला पहनाने नही दिया pic.twitter.com/LaABvoH31M
— छपरा जिला (@ChapraZila) December 9, 2023
வீடியோ இணையத்தில் வைரல் ஆனது
இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் @ChapraZila என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
‘மாப்பிள்ளைக்கு மணமகள் மீது உள்ள காதலை கண்கூடாக காண முடிகின்றது’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இது ஒரு அழகான திருமண வீடியோ’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | Viral Video: நானும் ரவுடி தான் என... சீண்டும் வாத்து... பின்னி பெடலெடுத்த பூனை... !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ