திருமணத்தில் தோழிகள் செய்த வேலையால் தேம்பித் தேம்பி அழுத மணப்பெண்

Viral Video: மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள் வராத திருமணம் கண்டிப்பாக நிறைவடையாது. இவர்கள் தங்களுக்கே உரிய பாணியில் திருமணத்திற்கு அழகு சேர்க்கிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 17, 2022, 06:10 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
  • சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன.
திருமணத்தில் தோழிகள் செய்த வேலையால் தேம்பித் தேம்பி அழுத மணப்பெண் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 

சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. 

மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள் வராத திருமணம் கண்டிப்பாக நிறைவடையாது. இவர்கள் தங்களுக்கே உரிய பாணியில் திருமணத்திற்கு அழகு சேர்க்கிறார்கள். இதனுடன், அனைத்து சடங்குகளிலும் இவர்கள் தங்கள் தோழன் / தோழியுடன் இருந்து அவர்களுடைய மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள்.  

இப்படிப்பட்ட ஒரு திருமண வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் மணமகன் மற்றும் மணமகளின் தோழர்களும் தோழிகளும் தங்களது அழகான நடனத்தால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார்கள். இந்த வீடியோவில் தனது தோழிகள் நடனமாடுவதைப் பார்த்து மணமகள் உணர்ச்சிவசப்படுவதை காண முடிகின்றது. 

மணப்பெண்ணின் தோழிகளின் நடனம்

வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், திருமணத்துடன் தொடர்புடைய மெஹந்தி விழாவில் மணப்பெண் தனது தோழிகளுடன் நடனமாடுவதைக் காண முடிகின்றது. தனது திருமணத்தில் தோழிகள் ஆடிய நடனத்தை பார்த்த மணமகள் திடீரென உணர்ச்சிவசப்படுகிறார். பின்னர் அவரது தோழிகள் அவரை சமாதானப்படுத்துகிறார்கள். மெஹந்தி விழாவின் போது வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் இந்த நடனத்தாலும் தோழமையாலும் கவரப்படுகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

மேலும் படிக்க | சிறுத்தையின் பார்வையில் சிக்கிய முதலை; இரையானதா.. இரையாக்கியதா..!! 

மணமகள் உணர்ச்சிவசப்படும் அந்த கியூட் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@theweddingministry)

மணமகளின் வீடியோ வைரலானது

இந்த வீடியோ theweddingministry என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. “இந்த தோழிகள் மணமகளின் மெஹந்தி நிகழ்ச்சியால் அவரை திகைக்க வைத்தனர். மணமகளின் கண்களே கலங்கிவிட்டன” என்று இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவுக்கு பல வியூஸ்களும் லைக்குகளும் வந்துள்ளன. இணையவாசிகள் பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | Snake Viral Video: சீண்டினால் சீறுவேன்! சீறினால் சீண்டுவேன்! பாம்புகளுடன் மல்லுக்கு நிற்கும் இளைஞன்...

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News