Viral Video: திருமணத்தில் நடந்த சம்பிரதாயத்தில் எற்பட்ட குளறுபடி, செம்ம காமெடி

மணமகளுக்கு குங்குமம் வைக்கும் விழாவின் போது, ​​ஒரு நபர் நகைச்சுவையாக சில செயல்களைச் செய்துள்ளார், அவை வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2021, 02:13 PM IST
Viral Video: திருமணத்தில் நடந்த சம்பிரதாயத்தில் எற்பட்ட குளறுபடி, செம்ம காமெடி title=

Viral Video: இணைய உலகத்தில் நாம் தினசரி வேடிக்கையான மற்றும் பல வித வீடியோக்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும், சில சமயங்களில் கோபத்தையும் சேர்க்கின்றன.

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதன்படி தற்போது இந்த பதிப்பில், மணமகளுக்கு (Wedding Video) குங்குமம் வைக்கும் விழா தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்ததும் முதலில் சிரிப்பு வரும், பிறகு கோபமும் வரும்.

ALSO READ: Viral Video: திருமண மேடையில் 'Out of Control' ஆன மணமகன், மேடையிலேயே செய்த காரியம்!! 

திருமணத்திற்கு முன் பல சடங்குகள் செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் போது, ​​பல வகையான நகைச்சுவையான சம்பிரதாயமும் செய்யப்படுகின்றன. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை மட்டும் பாருங்கள். மணமகளுக்கு (Bride) குங்குமம் வைக்கும் விழாவின் போது, ​​ஒரு நபர் நகைச்சுவையாக சில செயல்களைச் செய்துள்ளார், அவை வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், மணமகளுக்கு குங்குமம் வைக்கும் விழாவில், இரண்டு ஆண்கள் மணமகன் மற்றும் மணமகள் மீது சிவப்பு துணியை வைத்திருப்பதை நீங்கள் காணலாம். மணப்பெண் பக்கத்தில் இருக்கும் தோழி அந்த துணியில் எதோ தேடுவதை காணலாம். அதேசமயம் பக்கத்தில் இருந்த மற்றொரு நபர் அந்த துணியை இழுக்கத் தொடங்குகிறார். அப்போது அவர் மணமகனின் கழுத்தில் நேரடியாக விழுவதை நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்ப்போம்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் brides_speciall என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, பெரும்பாலான பயனர்கள் கோபமடைந்துள்ளனர்.

ALSO READ:Viral Video: இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம், இப்ப போய் இப்படி செஞ்சா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News