Viral Video: நூதன முறையில் அலங்காரம் செய்த மணப்பெண்... வேதனையில் குழந்தைகள்

Bride Bizarre Hairstyle: திருமணத்திற்கு மணமகள் ஒருவர் தனது சிகை அலங்காரம், ஆபாரணங்கள் முழுவதையும் சாக்லேட், மிட்டாய்களை கொண்டு செய்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 28, 2023, 08:58 AM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
  • 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்
  • 60 லட்சத்திற்கும் மேலாக வியூஸ்
Viral Video: நூதன முறையில் அலங்காரம் செய்த மணப்பெண்... வேதனையில் குழந்தைகள் title=

இந்தியாவில் திருமணங்கள் என்பது பல சடங்குகளை உள்ளடக்கிய பிரமாண்டமான மற்றும் ஆடம்பரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் திருமண நாளில் அழகாக இருக்க வேண்டம் என விரும்புகிறார்கள். மணமக்கள் தங்கள் திருமண ஆடைகளை தேர்ந்தெடுக்க திருமணத்திற்கு பல நாள்கள் முன்னரே சிந்தித்து அதனை வாங்கிவைக்கின்றனர். 

பல தம்பதிகள் தங்களின் வித்தியாசமான மேக்கப் மற்றும் இயற்கைக் காட்சிகளுடன் இருக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்ட, தனித்துவமான முயற்சியால் சமூக ஊடகங்களில் வைரலாக பெரும் முயற்சி செய்கிறார்கள். 

அதே டிரெண்டைப் பின்பற்றி, ஒரு மணப்பெண் தனது திருமணத்திற்கு வித்தியாசமான சிகை அலங்காரம் ஒன்றை முயற்சித்தார். இருப்பினும், முடி பாகங்கள் வழக்கமான ரைன்ஸ்டோன்கள் அல்லது பூக்களுக்கு பதிலாக சாக்லேட்டுகளாக நிறைந்துள்ளன.

மேலும் படிக்க | Viral Video: பாம்பிடம் சிக்கிய தவளை; மனதை பதறச் செய்யும் கொடூர வீடியோ!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான ஒப்பனை கலைஞர் சித்ரா, மணப்பெண்ணின் சிகை அலங்காரம் சாக்லேட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த தனித்துவமான சிகை அலங்காரத்தில் கிட் கேட், 5 ஸ்டார், மில்கிபார் மற்றும் ஃபெரெரோ ரோச்சர் போன்ற பிராண்டுகளின் சாக்லேட்டுகள் இருந்தன.

அதுவும் அந்த சாக்லேட்டுகளுடன் அலங்கரிக்கப்பட்ட பின்னல் கவனத்தை கவரும் வகையில் உள்ளது. மணப்பெண் மஞ்சள் நிற உடைக்கு மேட்ச்சாக, 'Mango Bite'மிட்டாயை கம்மலாக அணிந்துள்ளார். சிகை அலங்காரம் மட்டுமின்றி, அவரின் பல ஆபரணங்களும் சாக்லேட்டுகள், மிட்டாய்களால் நிறைந்துள்ளன. 

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதில் இருந்து, அந்த வீடியோ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட வியூஸ்களையும் குவித்துள்ளது. அனைத்து சாக்லேட்களையும் சாப்பிட்டு, மணப்பெண்ணின் தலைமுடியைக் கெடுத்துவிடுவார்கள் என்பதால், அவர் குழந்தைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று பலரும் கமெண்டில் கேலி செய்துள்ளனர். 

அதில் ஒருவர்,'எதுக்கு இதெல்லாம்' என்ற ரீதியில் கமெண்ட் செய்ய, பலரோ மணப்பெண்ணுக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்துள்ளனர். வித்தியாசமாக முயன்று பார்க்க வேண்டும் என நினைத்த மணபெண்ணுக்கு தங்களின் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற மணமகள் வைரல் வீடியோக்கள் இணையம் முழுவதும் நிறைந்துள்ளன. 

மேலும் படிக்க | ஆத்தாடி... குரங்கு விடுது பார் காத்தாடி: நம்ப முடியாத வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News