இன்றைய வைரல் வீடியோ: ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம் அல்லது சுவாசிக்க முடியாமல் மயக்கமடைந்தால், முதலுதவியாக CPR வழங்கப்படுகிறது. இதன் பொருள் கார்டியோ நுரையீரல் புத்துயிர். சரியான நேரத்தில் CPR கொடுப்பது என்பது பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும். ஆனால் பாம்புக்கு CPR கொடுப்பதை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மத்திய பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாம்புக்கு சிபிஆர் கொடுத்து உயிரைக் காப்பாற்றினார். ஆச்சரியப்பட வேண்டாம், நீங்கள் சரியாகப் படித்தீர்கள். நர்மதாபுரத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் துணிச்சலான போலீஸ்காரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இதுதான் முழு விவகாரம்:
இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. விஷமற்ற பாம்பு ஒன்று, அதாவது விஷம் இல்லாத பாம்பு, குடியிருப்பு காலனியின் பைப்லைனுக்குள் நுழைந்தது. அப்பகுதி மக்கள் குழாயில் இருந்து அகற்ற முயன்றும் பலனில்லை. இதையடுத்து மக்கள் பூச்சி மருந்தை தண்ணீரில் கரைத்து பைப்பில் ஊற்றினர். விஷத்தின் தாக்கத்தால், பாம்பு அமைதியின்றி வெளியே வந்தாலும் அதில் எந்த அசைவும் தெரியவில்லை. இதற்கிடையில், அங்கிருந்த ஒருவர் போலீசுக்கு போன் செய்தார். தகவல் கிடைத்ததும் அதுல் சர்மா என்ற காவலர் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தார். அங்கு வந்த அவர் அந்த பாம்புக்கு முதலில் CPR உதவி கொடுத்தார். இதனை அப்பகுதி மக்கள் காணொளியாக வெளியிட்டதால், ஷர்மாவின் துணிச்சலும், விவேகமும் தற்போது நாடு மற்றும் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுல் சர்மா முதலில் அந்த பாம்பை கூர்ந்து பார்த்து பின்னர் தனது வாய் வழியாக மூச்சு விட முயற்சிப்பது வீடியோவில் தெரிகிறது. இப்படி செய்துக் கொண்டிருந்த போது பாம்பு மெதுமெதுவாக நகரத் தொடங்குகிறது. பாம்பு CPR மூலம் காப்பாற்றப்பட்டதா அல்லது சுயநினைவு திரும்பியதா என்பதை உறுதியாகக் கூற முடியாது. அந்த பாம்பு உயிர் பிழைத்ததற்கு காரணம் எதுவாக இருந்தாலும், அந்த காவலரின் துணிச்சலுக்கு சல்யூட் அடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | அழகிப்போட்டியில் ஜெயித்தா எப்படி இருக்கும்? வீடியோ வைரல்
வீடியோவை இங்கே காணுங்கள்:
A police constable in Madhya Pradesh is giving CPR to a snake that had fallen unconscious after being exposed to pesticide-laced water. The constable, Atul Sharma, used mouth-to-mouth resuscitation to revive the snake, which was later released safely.#Viral #Snake #CPR pic.twitter.com/2uwV957jTf
— AH Siddiqui (@anwar0262) October 26, 2023
15 ஆண்டுகளில் 500 பாம்புகளை காப்பாற்றியதாக கான்ஸ்டபிள் கூறுகிறார்:
இதயனிடையே இந்த சம்பவத்தை பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளதாக கான்ஸ்டபிள் அதுல் சர்மா கூறுகிறார். பாம்புகளைப் பிடிப்பதில் அல்லது காப்பாற்றுவதில் அவர் எந்தப் பயிற்சியும் எடுத்ததில்லை. டிஸ்கவரி சேனலை அதிகம் பார்ப்பதாகவும், அங்கிருந்து பாம்புகளை மீட்க கற்றுக்கொண்டதாகவும் சர்மா கூறுகிறார்.
வீடியோ வைரல்:
இந்நிலையில் தற்போது பாம்பின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பை கண்டாலே படை நடுங்கும் என்பார்கள்.. ஆனால் பாம்பின் வாயில் மூச்சை செலுத்தும் இந்த காவலரின் செயலைக் கண்டு மெய் சிலிர்க்க நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பை கையாளத்தெரிந்த நபர்கள் மட்டுமே இது போன்ற உடனடி உயிர் காக்கும் சிகிச்சையை பாம்புகளுக்கு முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஜாலியா போட்டோவுக்கு போஸ் குடுக்க உங்களுக்கு நேரம் இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ