மானை கபளீகரம் செய்யும் கொமோடோ டிராகன்! இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!

Viral Video: இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில், கொமோடோ டிராகன் ஒரு மானை அதன் ரேஸர்-கூர்மையான பற்களால் தாக்கி ஒரே அடியாக விழுங்கும் அதிர்ச்சியான காட்சியை காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 17, 2023, 08:24 PM IST
  • கொமோடோ டிராகன் மானை ஒரே அடியில் பிடித்து விழுங்கிய அதிர்ச்சி காட்சி.
  • காட்டு வாழ்க்கையே வாழ்வா சாவா போராட்டம் நிறைந்தது தான்.
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ.
மானை கபளீகரம் செய்யும் கொமோடோ டிராகன்!  இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்! title=

காட்டு வாழ்க்கையே வாழ்வா சாவா போராட்டம் நிறைந்தது தான்.  காடுகளில் பெரிய வேட்டை போராட்டங்களை காட்டும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் பல நம் ரத்தத்தை உறைய வைத்து விடும். தற்போது, ​​கொமோடோ டிராகன் மானை தாக்கி, அதை உயிருடன் விழுங்கும் திகில் வீடியோ வெளியாகியுள்ளது. மான் கொமோடோ டிராகனின் பிடியிலிருந்து வெளியேற முயற்சிக்கிறது, ஆனால் அதன் அனைத்து முயற்சிகளும் வீணாகின்றன.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ, கொமோடோ டிராகன் ஒரு மானை அதன் ரேஸர்-கூர்மையான பற்களால் தாக்குவதுடன் தொடங்குகிறது. மானால் எதிர்த்துப் போராட முடியவில்லை. சில நொடிகளில், கொமோடோ டிராகன் மான் மீது பாய்ந்து, ஒரே அமுக்காக அமுக்கி விலங்கை முழுவதுமாக விழுங்குகிறது.

மனம் பதற வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ இணையம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது, இன்ஸ்டாகிராமில் இது குறித்து சரமாரியான கருத்துகளை பயனர்கள் பதிவு செய்துள்ளனர். ஒரு பயனர் , "இயற்கை அதன் காரியத்தைச் செய்கிறது." என எழுதினார். மற்றொரு பயனர், "இது மிகவும் வேதனையானது.. அதன் கால் சிறியது, அதனால் வலி மிகப்பெரியது!" என எழுதியுள்ளார்.

கொமோடோ டிராகன்கள் நீளமான வால்கள், வலுவான மற்றும் சுறுசுறுப்பான கழுத்துகள் மற்றும் வலுவான மூட்டுகள் கொண்ட மிகப்பெரிய மற்றும் கனமான பல்லிகள் ஆகும். அவை இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டவை. இந்த காட்டு டிராகன்கள் பொதுவாக சுமார் 154 பவுண்டுகள் (70 கிலோ) எடையுள்ளதாக இருக்கும், ஆனால் மிகப்பெரிய முழுவதுமாக வளர்ந்த கொமோடோ டிராகம்,  10.3 அடி (3.13 மீ) நீளத்தை எட்டக் கூடியது மற்றும் 366 பவுண்டுகள் (166 கிலோ) எடை கொண்டது. 

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News