பல்கலைக்கழக மாணவர் ஒருவர், ஆன்லைன் வகுப்பு நடந்துக் கொண்டிருக்கும்போது கேமராவை அணைக்காமல் உடலுறவில் ஈடுபட்டது நேரடியாக நேரலையாக ஒலிபரப்பானது. அதை பார்த்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த ஆன்லைன் செக்ஸ் வீடியோவில் ஒரு சிறு கிளிப் கடந்த வாரம் ஆன்லைனில் கசிந்தது. அதன் பிறகு நடந்தது என்ன?
COVID-19 தொற்றுநோயின் அலைகளில் தத்தளிக்கும் உலகத்தின் இயல்புவாழ்க்கை மாறிவிட்டது. அதில் முக்கியமாக சொல்ல வேண்டியது கல்வி. சிறு குழந்தைகள் முதல் பட்டப் படிப்பு வரை அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகளும் ஆன்லைனுக்கு மாறிவிட்டது. இந்த நிலை கொரோனாவின் தாக்கத்திற்கு ஏற்றவாறே மாறுபடும்.
நேரடி வகுப்புகளிலிருந்து மெய்நிகர் வகுப்புகளுக்கு கல்வி (Educaiton) மாறிவிட்டது. இந்த புதுவித கற்பிக்கும் விதம் கொரோனாவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், வினோதமான மற்றும் வித்தியாசமான அனுபவங்களையும் தருகிறது. அவை நம் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பும்போது நிச்சயமாக அனைவருக்கும் நினைவில் இருக்கும்.
அண்மையில் வியட்நாமின் ஹோ சி மின் நகரத்தைச் (Ho Chi Minh city of Vietnam) சேர்ந்த ஒரு மாணவர், ஆன்லைன் வகுப்பு நடந்துகொண்டிருக்கும் போது தனது கூட்டாளருடன் உடலுறவு கொள்ளும்போது கேமராவை அணைக்க மறந்துவிட்டதால் அவர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவிட்டார்.
Also Read | ஒரு லைட், ஒரு ஃபேனுக்கு லட்சத்தில் வந்து ஷாக் கொடுத்த மின்சார கட்டணம்!!
அதை பார்த்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த ஆன்லைன் செக்ஸ் வீடியோவில் ஒரு சிறு கிளிப் கடந்த வாரம் ஆன்லைனில் கசிந்தது.
இந்த சம்பவத்தால் மாணவர் மீது கோபமடைந்த பேராசிரியர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நேரடியாக வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் இருக்கிறோம், நீங்கள் உடலுறவு கொள்கிறீர்கள்” என்று சீற்றத்துடன் கத்தியதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
பேராசிரியரின் கோபமான வார்த்தைகளைக் கேட்ட பிறகு தான், தனது தவறை உணர்ந்துக் கொண்ட மாணவர், உடனடியாக ஆடையால் உடலை மறைத்துக் கொண்டு, நொடிப் பொழுதுக்குள் கேமராவை அணைத்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் பேராசிரியர் மற்றும் தனது வகுப்பு தோழர்களிடம் அந்த மாணவர் மன்னிப்பு கோரியதாக வியட்நாமிய செய்தித்தாள் லாவோ டோங் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியான பிறகு, பல்கலைக்கழகம் அதை உறுதிப்படுத்தியதுடன், ஆன்லைன் (online classes) வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மேலும் அந்த வீடியோவைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டது.
Also Read | சிலம்பம் சுற்றி மணவாழ்க்கையை தொடங்கும் மணமகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR