மோகத்துடன் மேகத்தைத் தழுவி தன்னுள் அரவணைக்கும் கடலலை காதலன்

கோடைக்காலத்தில் கடற்கரைக்கு செல்ல விரும்பாவதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடற்கரைகள் என்றுமே அனைவரையும் கவர்ந்திழுப்பவை.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2022, 06:53 PM IST
  • வண்ணமயமாய் ஜாலம் காட்டும் கடலலை
  • மேகத்தாரையை இழுத்துவரும் கடலலை
  • வானளவு உயர்ந்து தரையைத் தொடும் பேரலை
மோகத்துடன் மேகத்தைத் தழுவி தன்னுள் அரவணைக்கும் கடலலை காதலன் title=

கோடைக்காலத்தில் கடற்கரைக்கு செல்ல விரும்பாவதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடற்கரைகள் என்றுமே அனைவரையும் கவர்ந்திழுப்பவை.

உண்மையில் கடற்கரை என்று சொன்னாலும், அங்கு நம்மை கவர்ந்திழுப்பவை கடலின் அலைகளே. கடற்காற்று தரும் சுகமும், கடலலைகள் சிதறும் நீரும், மணலில் கால் புதைத்து நிற்கும் அனுபவமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவை.

கடல் அலைகள் என்றாலே மனதில் மகிழ்ச்சி தோன்றினாலும், சிறு அலை முதல் மிகப் பெரிய சுனாமி அலை என அலைகளின் தீவிரமும் அளவும் மாறுபடுபவை. 

வழக்கமாக கடற்கரைக்குச் செல்ல ஆசைப்படும் நம்மால், சுனாமி அலையைப் பார்த்தால் பயப்படாமல் இருக்க முடியுமா?

மேலும் படிக்க | மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை

ஆனால், மிகப் பெரிய அலையாக இருந்தாலும் அதை ரசிக்க வைக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி பலரின் மனதையும் கவர்ந்துள்ளது.

இந்த வீடியோவில் கடலலை கருமையாக தெரிந்தாலும், அது பல வண்ண ஜாலங்களை காட்டுகிறது. 37 விநாடிகளே இருக்கும் இந்த வைரல் வீடியோவில் பலவித பரிணாமங்கள் தெரிகிறது. இதைப் பார்த்தால், அலையின் பிரம்மாண்டம் நம்மை மலைக்க வைக்கிறது.

வீடியோவைப் பார்த்தால், ஒரு முறையுடன் பார்ப்பதை நிறுத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. கடலின் அலை வானத்தை எட்டுகிறது.

விண்ணை முட்டும் அலைகள், வானிலிருக்கும் மேகத்தை இழுத்துவந்து கடலில் விடும் காட்சி அற்புதமாக இருக்கிறது.

அரை நிமிடத்தில் பல அற்புதங்களைக் காட்டும் இந்த வீடியோ, Buitengebiede என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு, பலரால் பார்க்கப்பட்டு இணையத்தில் சுற்றி சுற்றி வலம் வருகிறது.

இணையத்தில் வலமாக வலம் வந்தாலும், இந்த கடலலை எழும்புவது என்னவோ வானை நோக்கித்தான் என்றாலும் அது செங்குத்தாக இல்லை. வளைந்து நெளிந்து கடலலை உயர்வதைப் பார்த்தால், அது நாகப்பாம்பு படமெடுப்பதைப் போல தோன்றுகிறது.

மேலும் படிக்க | போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்! 

நொடிக்கு நொடி மாறும் வண்ண ஜாலம், விண்ணில் இருக்கும் மேகக்கூட்டத்தை பிடிவாதமாக இழுத்து, முரட்டுத்தனமாக கடலுக்கு தள்ளும் பிடிவாதம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலிக்கிறது இந்த கடலலை.

கருமை, வெண்மை, மஞ்சள், சிவப்பு, நீலம் என வண்ணமயமாக சட்டென்று மாறி உருமாறி கடலில் விழும் இது ஒற்றை அலையா?

அலைகள் என்றும் ஓய்வதில்லை என்றாலும், ஒரு அலை ஒருமுறைதான் வரும் என்பதும் உண்மைதானே? இந்த அலை ஒருமுறை மட்டுமே கடலில் எழுந்திருந்தாலும், லட்சக்கணக்கானவர்களால் தொடர்ந்து வீடியோவில் பார்க்கப்பட்டு அமர அலையாக மாறிவிட்டதோ?

இயற்கையின் மாயஜாலங்கள் என்றும் என்றென்றும் பிரமிப்பைத் தருபவை. அதற்கு அண்மை உதாரணமாக இந்த கடலலை வீடியோ நம்மை அலைபாய வைக்கிறது.

மேலும் படிக்க | ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News