துல்கரின் தயாரிப்பு முயற்சியில் உதவி இயக்குனராக அனுபமா பரமேஸ்வரன்!

தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்!!

Last Updated : May 30, 2019, 12:17 PM IST
துல்கரின் தயாரிப்பு முயற்சியில் உதவி இயக்குனராக அனுபமா பரமேஸ்வரன்! title=

தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்!!

மலையாள திரையுலகில் மட்டும் ஒன்றி ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர், தனுஷின் ‘கொடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானதோடு, தெலுங்கு சினிமாவிலும் எண்ட்ரியானார்.

‘கொடி’ படத்திற்குப் பிறகு அனுபமாவை தமிழ் சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை என்றாலும், தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக வலம் வருகிறார். தொடர்ந்து இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் அனுபமாவுக்கு தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. என்னதான் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், அனுபமா ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில், ஹோம்லி வேடத்தில் நடித்து வந்த அனுபமாவை கவர்ச்சி வேடத்திற்கு தெலுங்கு சினிமா மாற்றியிருப்பது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தெலுங்கு சினிமாவில் பல இளம் நடிகைகள் களத்தில் இறங்கியிருப்பதோடு, கவர்ச்சியாக நடிக்க ஓகே சொல்லும் இவர்கள் முத்தக் காட்சிகளிலும் துணிந்து நடிக்க, இவர்களுடனான போட்டியை சமாளிப்பதற்காகவே தற்போது அனுபமாவும் கவர்ச்சிக்கு மாறிவிட்டாராம்.

இதை தொடர்ந்து, தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் அனுபமா.  துல்கர் சல்மான் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சம்சு சைபா இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் ஜேக்கப் கிரிகோரி இந்த படத்தில் நயகனாக நடித்து வருகிறார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "ஒரு புதிய துவக்கம், துல்கர் சல்மானின் புதிய தயாரிப்பு முயற்சியில் இந்த புதிய திறமை சம்சு சாய்பாவுக்கு ஒரு புதிய ஆரம்பம் உதவுகிறது. மிகவும் உற்சாகமாக, மகிழ்ச்சியாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்க வேண்டும். முற்றிலும் இந்த அற்புதமான அணி மற்றும் எப்படி படம் வடிவமைக்கும் காதல். பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய, விரைவில் புதுப்பிக்கப்படும். உங்கள் ஆசீர்வாதம் மற்றும் அன்பு தேவை" என அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

Trending News