திருமணத்தில் திடீரென நுழைந்த காளை ஆடிய ஆட்டம்: திகிலூட்டும் வைரல் வீடியோ

Viral Wedding Video: திருமணத்தில் இப்படி கூட நடக்குமா என வியக்க வைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் ஒரு காளையின் லூட்டியை காண முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 8, 2022, 06:06 PM IST
  • திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • திருமண நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்த ஒரு ராட்சத காளையின் வீடியோ வைரல்.
திருமணத்தில் திடீரென நுழைந்த காளை ஆடிய ஆட்டம்: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பொதுவாக திருமண நாளில் ஏதேனும் அசம்பாவிதமோ, அல்லது எதிர்பாராத நிகழ்வுகளோ நடந்தால், அது குடும்பத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு சலசலப்பின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. நாம் சாலைகளில் நடக்கும்போதெல்லாம், பசு-எருமை போன்ற பெரிய விலங்குகளைத் தவிர்த்து ஓரமாக செல்கிறோம். அவை நம்மை தாக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். பெரிய மண்டபங்களிலும், மைதானங்களிலும் திருமணங்கள் நடக்கும்போது, இதுபோன்ற விலங்குகள் அங்கு நுழையாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றையும் மீறி சில கில்லாடி மிருகங்கள் உள்ளே நுழைந்து விடுகின்றன. 

அப்படி திருமண நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்த ஒரு ராட்சத காளையின் வீடியோ  தற்போது வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். காளை உள்ளே புகுந்தவுடன், திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்குகிறார்கள். வீடியோவை பார்த்தால், காளைக்கு பயந்து அனைவரும் திருமண பந்தலை காலி செய்தது போலத் தெரிகிறது. 

மேலும் படிக்க | மகனுக்காக தந்தை செய்த செயல்: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ 

காளை திருமணத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pretty Matti (@prettymatti)

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திடீரென திருமண மண்டபத்தில் புகுந்த காளை, அங்கும் இங்கும் உலா வருவதைக் காண முடிகின்றது. உணவுகளை ருசி பார்க்கும் நோக்கத்தில் உணவுகள் வைகப்பட்டிருக்கும் இடத்திற்கும் அது செல்கிறது. அங்கு சிறிது நேரம் சுற்றித் திரிந்த அந்த காளை, சுற்றிலும் சிலர் இருப்பதைக் கண்டவுடன் கொம்பினால் அவர்களைத் தாக்கத் தொடங்கிறது. 

இதைப் பார்த்த விருந்தாளிகளில் ஒருவர் அங்கிருந்து ஓடத் தொடங்குகிறார். ஆனால், பரிதாபமாக கீழே விழுந்து விடுகிறார். திருமணத்திற்கு சென்ற ஒருவர் இந்த வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ இப்போது மிகவும் வைரலாகி வருகிறது. 

சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

அந்த காளை யாரையும் காயப்படுத்தவில்லை. அனைவரும் பீதியில் பார்த்துக்கொண்டிருக்கையில், உணவு ஸ்டாலின் அருகில் இருந்த இடம் வழியாக அது வெளியே சென்று விடுகின்றது. வீடியோவில் துவக்கத்தில், அந்த காளை, ஃபுட் ஸ்டாலை தாக்கி, உணவை வீணடித்து விடக்கூடாது என்ற பதற்றம் நமக்கு ஏற்படுகின்றது. ஆனால், அது அப்படி எதையும் செய்யாமல் இருப்பது நிம்மதி அளிக்கின்றது.

இந்த வீடியோ, இன்ஸ்யாகிராமில், prettymatti என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 'அதிர்ஷ்டவசமாக அது அமைதியாக திரும்பிசென்றது' என ஒரு பயனர் எழுய்தியுள்ளார். 'அது செல்லாமல் இருந்திருந்தால் திருமணத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கும்' என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | இது உனக்கு தேவையா...நபரை வெச்சி செஞ்ச பாம்பு: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News